கும்பகோணத்தில் இருக்கும் பரிகார தலங்கள்

பிரச்சனை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும். பிரச்சனைகள் அகல‌ கோயில்களில் பரிகாரம் செய்வ‌தால் நற்ப‌லன்கள் கிடைக்கும். இப்பக்கத்தில் கும்பகோணத்தில் உள்ள பரிகார ஸ்தலங்கள் பற்றி பார்ப்போம்.

பிரச்சனை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும். பிரச்சனைகள் அகல‌ கோயில்களில் பரிகாரம் செய்வ‌தால் நற்ப‌லன்கள் கிடைக்கும். இப்பக்கத்தில் கும்பகோணத்தில் உள்ள பரிகார ஸ்தலங்கள் பற்றி பார்ப்போம்.

குழந்தையினமை மற்றும் புத்திரபாக்கியம் கிடைக்க கருவளர்ச்சேரி.
கரு வளர்ச்சி மற்றும் சுகப்பிரசவத்திற்கு திருக்கருக்காவூர்.
நோயற்ற வாழ்வை பெற வைத்தீஸ்வரன் கோவில்.
நல்ல அறிவு மற்றும் ஞானத்தை பெற சுவாமிமலை.
கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க கூத்தனூர்.
எடுத்த காரியம் வெற்றி பெற பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்.
பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிக்க கும்பகோணம் பிரம்மன் கோயில்.
செல்வம் பெறுக சமூகத்தில் அந்தஸ்து கிடைக்க அருள்மிகு ஶ்ரீ ஒப்பிலியப்பன் கோயில்.
சர்ப்ப தோஷம் நீங்க திருபுவனம் சரபேஸ்வரர் கோவில்.
கடன் தொல்லை நீங்க திருச்சேறை சரபரமேஸ்வரர்.
இழந்த செல்வத்தை மீண்டும் பெற திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்.
பெண்களுக்கு ருது தோஷம் நீங்க கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).
திருமணத்தடைகள் நீங்க திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்.
நல்ல கணவன் மற்றும் வரன் கிடைக்க கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்.
கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க பெரியநாயகி சமேத
சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்திமுற்றம்.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்.
பில்லி சூனியம் மற்றும் செய்வினை நீக்க அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கி தேவி கோயில்.
கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற திருபுவனம் கம்பஹரேஸ்வர் திருக்கோயில்.
பாவங்கள் விலக கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.
மாரு பிறவியை போக்க / எம பயம் நீங்க திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்.
நீண்ட ஆயுள் பெற திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்.
குழந்தை வரம் கிடைக்க திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில்.

Kumbakonam Temples for Remedies or Pariharam | Remedial temples in Kumbakonam

பலவிதமான பிரச்னைகளை மனிதர்களின் தங்களது வாழ்க்கையில் நேரிடுகின்றனர். அவரவர் வாழ்க்கையில் பிரச்னைகள் என்பது ஏதாவது வழியில் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக பரிகார தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் அவை எல்லாம் அகன்றுவிடும் என்பது அவரவரின் நம்பிக்கை. ஆக‌, உங்கள் வாழ்க்கையில் நேரிடுகின்ற‌ பிரச்சனைகள் அகல‌ மேலே குறிப்பிடப் ப‌ட்டுள்ள கும்பகோணத்தில் அமைந்திருக்கும் கோயில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்யலாம். மனம் அமைதி பெறும் !. நம்பிக்கை பிறக்கும் !!.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment