தை அமாவாசை அன்று வீட்டில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் உண்டாகும் அற்புத பலன்கள் !!
அமாவாசையன்று மாலை பஞ்சகவ்ய விளக்கை நெய் ஊற்றி திரி போட்டு வீட்டின் முக்கியமான பகுதியில் ஏற்றினால் நற்பலன்கள் கிடைக்கும்.
பஞ்சகவ்ய விளக்கு
Benefits of lighting Pancha kavya Vilaku
பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.தை அமாவாசையில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் நல்லது.
பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றினால் ஒரு ஹோமம் செய்ததற்கு சமமானதாகக் கருதப்படுகிறது. தை அமாவாசையான மாலை நேரத்தில் இந்த பஞ்சகவ்ய விளக்கை எடுத்து, அதில் நெய் ஊற்றி திரி போட்டு வீட்டின் முக்கிய பகுதியில் ஏற்ற வேண்டும். பூஜை அறை, வீட்டின் நடு பகுதி அல்லது நிலைவாசற் படி என எங்கு வேண்டுமானாலும் விளக்கை ஏற்றலாம். பஞ்சகவ்ய விளக்கை நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். மிக முக்கியமாக இந்த விளக்கை ஒரு அகலமான தட்டில் வைத்து ஏற்ற வேண்டும் ஏனென்றால் இது யாகம் செய்யும் போது வரும் தீயை போல விளக்கு முழுக்க பற்றி எரியும்.
அப்படி முழுமையாக விளக்கு எரிந்து சாம்பலானவுடன் அந்த சாம்பலை எடுத்து விபூதியாக பூசிக்கொள்ளலாம். இதனால் வீட்டில் உள்ள பிரச்சினைகள் விலகி சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த தீபத்தை ஏற்றிய பின்பு ஏதாவது ஒரு பிரசாதம் செய்து கடவுளுக்கு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
பஞ்சகவ்ய விளக்கு எங்கு கிடைக்கும்?
உங்களால் முடிந்தால் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து, பிசைந்து விளக்கு வடிவில் தயாரித்து, காயவைத்தும் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பஞ்சகவ்வியம் விளக்கை மொத்தமாக வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் கருத்து : comment