வெளியிட்ட தேதி : 24.03.2021
Jack Dorsey's first ever tweet
Commerce

Jack Dorsey's first ever tweet sells for $2.9m

ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் (Twitter founder Jack Dorsey) முதல் ட்வீட் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு $2.9 (£2.1m) க்கு விற்கப்பட்டுள்ளது. இதனை மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் சினா எஸ்டாவி (Sina Estavi) விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

"just setting up my twttr," என்கின்ற‌ வாசகம் தாங்கிய‌ இந்த‌ முதல் ட்வீட்டானது முதன்முதலில் மார்ச் 21, 2006 அன்று ஜாக் டோர்சியால் வெளியிடப்பட்டது. இப்போது, ஜாக் டோர்சியால் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக அவரது முதல் ட்வீட் ஏலம் விடப்பட்டது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்த முதல் டீவீட், நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்சி (Jack Dorsey) ஏழை குடும்பங்களுக்காக 15 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறார். அதில் ஒரு பங்காக இந்த பணத்தையும்
சேர்த்துள்ளார் என கூறப்படுகிறது.

NFT (Non-Fungible Token) என்பது ஒரு புகைப்படம், வீடியோ அல்லது பிற ஆன்லைன் ஊடகங்களை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். ஒவ்வொரு NFT ஆனது ஒரு சேகரிப்பாளருக்கு, தனித்துவமானது மற்றும் நகலெடுக்க முடியாத உருப்படியாக செயல்படுகிறது, மேலும் இது ரூபத்தால் அரிதாகிவிடும்.

பிட்காயினுக்கு போட்டியான ஈதர் கிரிப்டோகரன்ஸியைப் (ether cryptocurrency) பயன்படுத்தி இந்த ட்வீட் வாங்கப்பட்டது. தொழில்நுட்ப நிறுவனமான பிரிட்ஜ் ஆரக்கிளின் (Bridge Oracle) தலைமை நிர்வாகி திரு எஸ்டாவிக்கு திங்களன்று NFT (Non-Fungible Token) டோக்கனாக இந்த டிஜிட்டல் மெசேஜ் விற்கப்பட்டது.

இதை வாங்கிய தொழிலதிபர் சினா எஸ்டாவி (Sina Estavi) தனது ட்விட்டர் பக்கத்தில் "இது ஒரு ட்வீட் மட்டுமல்ல!. மோனாலிசா ஓவியம் போன்ற இந்த ட்வீட்டின் உண்மையான மதிப்பை மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு உணருவார்கள் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.