வெளியிட்ட தேதி : 02.08.2021
Corona Virus vaccine
மருத்துவம்

Covid-19 vaccine gift prizes, incentives announced by world countries

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கவும் 3வது அலை பெரியதாக வெடிக்கும் முன்பு கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
தடுப்பூசி மட்டும் தான் கொரோனாவை வெல்லும் ஆயுதமாகவும் கட்டுப்படுத்த முக்கிய காரணமாகவும் விளங்குகிறது. ஆனால் உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி ஏற்றுக்கொள்ள‌ தயக்கம் காட்டுவதால் உலக நாடுகள் மக்களை ஈர்க்கும் வகையில் பல கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்துள்ளது.

அந்த‌ வகையில் எந்தெந்த‌ நாடுகள் என்னென்ன‌ பரிசுகளை அறிவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்தியா : சென்னையிலும், இயங்கி வரும் ஓர் பவுண்டேஷன் அமைப்பு தங்க நாணயம், வாசிங் மெஷின், மிக்சி, பைக் ஆகியவற்றைப் பரிசாக அளிப்பதாகவும், இதேபோல் பிகார், குஜராத், அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளில் மட்டும் சலுகை பரிசுகள் அறிவிக்கப்பட்டும் உள்ளது.

ஹாங்காங் : கோவிட் வேக்சின் பரிசு

ஹாங்காங் அரசு உலகிலேயே யாரும் கொடுக்காத அளவில் அட்டகாசமான‌ பரிசுகளை அறிவித்துள்ளது. வேக்சின் போடுபவர்களுக்கு டெஸ்லா, உலகிலேயே காஸ்ட்லியான நகரமான ஹாங்காங்-ல் அப்பார்ட்மென்ட், தங்க பார், வைரம் பதிக்க‌ப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் அல்லது 1,00,000 டாலர் மதிப்பிலான ஷாப்பிங் கிப்ட் என‌ பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரஷ்யா : கோவிட் வேக்சின் பரிசு

ஸ்புட்நிக் எனும் பெயரில் வேக்சின்-ஐ தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் ரஷ்யாவும் தன் நாட்டு மக்களை வேக்சின் போட்டுக்கொள்ள ரஷ்ய அதிபர் வெளியிட்ட அறிவிப்பில் வேக்சின் போட்டுக்கொள்பவர்களுக்கு ஸ்னோமொபைல் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா : கோவிட் வேக்சின் பரிசு

அமெரிக்காவின், மேற்கு வர்ஜீனியா மாகாணம் வேக்சின் போடுபவர்களுக்கு வேட்டையாட வாழ்நாள் லைசென்ஸ் மற்றும் கஸ்டம் துப்பாக்கி ; அலபாமா மாகாணம் வேக்சின் போடுபவர்களுக்கு ஸ்பீட்வே டிராக்-ல் வாகனத்தை ஓட்ட அனுமதி ; நியூயார்க் மாகாணம் அரசின் வேக்சின் டிரைவ்-ல் முதல் முறையாக வேக்சின் போடுபவர்களுக்குப் பணம் பரிசு ; ஓஹியோ மாகாணம் 12 முதல் 17 வயதில் இருப்போர் வேக்சின் எடுத்துக்கொண்டால் 4 வருடம் முழுமையான ஸ்காலர்ஷிப் இலவசம் என அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேக்சின் போடுபவர்கள் அனைவருக்கும் 100 டாலர் அளிக்கப்படும் எனத் தெரிவித்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கொலராடோ, இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா மற்றும் டெலாவேர் ஆகிய மாகாணங்களும் பலதரப்பட்ட பரிசு, பணம், சலுகைகளை அறிவித்துள்ளது.

செர்பியா : கோவிட் வேக்சின் பரிசு

செர்பியா அதிபர் அலெக்ஸாண்டர் வுசிக் வேக்சின் போடத் தூண்டுவதற்குப் பணத்தைப் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்

அதுபோல் இஸ்ரேலில் வேக்சின் போடுவோருக்கு ஜிம், ஹோட்டல், ரெஸ்டாரென்ட் செல்ல அனுமதி, கிரீன் பாஸ் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் கிரீஸ்

இதேபோல் ப்ராக் வேக்சின் போடுபவர்களுக்கு ஐபோன் கொடுப்பதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஏதென்ஸ் நகரில் பார் அல்லது ரெஸ்டாரென்ட்-க்கு இலவசமாகச் செல்ல பாஸ் வழங்கப்படுகிறது.

இன்னும் சில நாட்டில் இலவச போன் டேட்டா, புட்பால் ஸ்டேடியத்தில் சுற்றுலா, கறி விருந்து எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.