வெளியிட்ட தேதி : 15.11.2021

First rhino horn NFT sold at auction in South Africa

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஏலத்தில் காண்டாமிருகக் கொம்பின் டிஜிட்டல் பிரதி விற்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உண்மையான காண்டாமிருகங்களைப் பாதுகாக்க பணம் திரட்டும் முயற்சியில் காண்டாமிருகத்தின் கொம்பின் NFT படம் முதல்முறையாக ஏலத்தில் விற்கப்பட்டது.. கேப் டவுன் தொழிலதிபர் சார்ல் ஜேக்கப்ஸ் (Cape Town businessman Charl Jacobs ) இந்த‌ டிஜிட்டல் கொம்பிற்காக‌ 105,000 ரேண்ட் (6,850 டாலர்கள், 6,000 யூரோக்கள்) செலுத்தினார், அதை அவர் தனது குழந்தைகளுக்காக ஒரு அறக்கட்டளையில் வைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

NFT என்றால் என்ன?
NFT என்பது கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள், வீடியோக்கள் மற்றும் சில சமயங்களில் மீம்ஸ் போன்ற நிஜ உலகப் பொருட்களைக் குறிக்கும் டிஜிட்டல் சொத்து ஆகும். NFT-ன் நம்பகத்தன்மை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் சான்றளிக்கப்பட்டு மற்றும் இதை ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

தென்னாப்பிரிக்காவிற்குள் உண்மையான காண்டாமிருக கொம்புகளை வர்த்தகம் செய்வது சட்டப்பூர்வமானது, ஆனால் இந்த விஷயத்தில் அசல் கொம்பு பாதுகாப்பிற்காக பூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சார்ல் ஜேக்கப்ஸ், "காண்டாமிருகங்கள் முற்றிலும் சீர்குலைந்துபோகும் ஒரு மோசமான சூழ்நிலை வந்தால் கூட, நான் அப்போதும் ஒரு காண்டாமிருகக் கொம்பை உரிமையுடன் வைத்திருப்பேன், ஏனென்றால் NFT என்பது ஒரு நிஜ காண்டாமிருகக் கொம்பின் அடையாளமாகும்" என்று கூறினார்.

இந்த ஏல‌ விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய 200 காண்டாமிருகங்களைக் கொண்ட தனியார் Black Rock Rhino பாதுகாப்பு அமைப்பிற்கு செல்லும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடுபவர்களின் கோர‌ தாண்டவமானது குறைந்தது 249 காண்டாமிருகங்களைக் கொன்றுள்ளது. இது 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்ததை விட 83 அதிகம். விலங்குகள் அவற்றின் கொம்புகளுக்காக படுகொலை செய்யப்படுகின்றன, அவை ஆசியாவிற்கு கடத்தப்படுகின்றன, அங்கு அவை பாரம்பரிய மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மிகுதியான‌ பணத்தில் மதிக்கப்படுகின்றன.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.