வெளியிட்ட தேதி : 15.11.2021

Bitcoin's price is currently Rs 50,03,493 and its dominance is currently 43.36 percent, an increase of 0.06 percent over the day.

சமீப காலமாக, அலுவலகங்களிலும் படித்தவர்களுக்கு மத்தியிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது பிட்காயின் வர்த்தகம். கிரிப்டோகரன்சியில் ஒரு வகைதான் இந்த பிட்காயின். சர்வதேச டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எதிர்காலமாக கிரிப்டோகரன்சிகள் உருவெடுத்து வரும் நிலையில், பிட்காயின், டாஜ்காயின் எத்திரியம் காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் விண்ணைமுட்டும் வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrency) மற்ற நாணங்களை போல் கையில் வைத்து உணர முடியாது என்பது கவனிக்கத்தக்கது. அதாவது நீங்கள் பிட்காயினை எடுத்து உங்கள் கையில் வைத்திருக்க முடியாது. இந்திய ரூபாயைப் போலன்றி, கிரிப்டோகரன்சியின் மதிப்பை பராமரிக்கும் மத்திய அதிகாரம் எதுவும் இல்லை. மாறாக, இந்த பணிகள் இணையம் வழியாக கிரிப்டோகரன்சியின் பயனர்களிடையே பரவலாக விநியோகிக்கப்படுகின்றன.இது இடைத்தரகர் இல்லாமல் இணையத்தில் பியர்-டு-பியர் (Peer-to-peer transaction) பரிமாற்றம் செய்யப்படுகிறது.

கிரிப்டோகரன்ஸிகள் என்றால் என்ன?

கிரிப்டோகரன்ஸிகள் என்பது டிஜிட்டல் சொத்துக்கள் ஆகும். இவற்றை நீங்கள் முதலீடுகளாகவும் ஆன்லைன் பர்ச்சேஸ்களுக்காகவும் பயன்படுத்தலாம். இது கிரிப்டோகிராஃபி மூலம் பாதுகாக்கப்படுகிறது. இவற்றை போலியாகவோ அல்லது இருமுறை செலவு செய்வதோ கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஆன்லைனில் புழங்கும் பிட்காயின் உள்ளிட்ட‌ கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை எதுவும் இல்லை. அதே சமயத்தில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளும் இல்லை. உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மீது ஆர்வம் எழுந்துள்ளது. அதே சமயத்தில் அதனால் ஆபத்து உருவாகுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறித்து சமீபத்தில் இந்திய‌ அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிட்காயினின் விலை தற்போது ரூ.50,03,493 ஆகவும், அதன் ஆதிக்கம் தற்போது 43.36 சதவீதமாகவும் உள்ளது, இது நாளுக்கு நாள் 0.06 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.