சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன் சரணம் பாடு! சோர்வு தீர துயரம் ஓட சரணம் ஐயப்பன் பாடல் வரிகள். Swami saranam paadu ayyan aiyappan saranam paadu - Ayyappan Devotional songs Tamil Lyrics
சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன்
சரணம் பாடு!
சோர்வு தீர துயரம் ஓட சரணம்
சரணம் பாடு!
இரவு பகலும் எந்த நேரமும் ஐயப்பன்
புகழைப் பாடு!
இதில் சாமி என்பதும் ஐயப்பனே சரணம் என்பதும் ஐயப்பனே!
என்றும் ஐயப்பனையே வணங்கி வந்தால்
அச்சமும் பயமும் போய் விடுமே!
கலியுகவரதன் அவன் கண்கண்டதெய்வம்
சபரிமலையில் வாழும் ஐயன்!
அன்னதானப் பிரபு அவர் பம்பையில்தான் பிறந்தார்!
பந்தளத்தில் தான் வளர்ந்தார்!
கோபம் அடங்கி சாந்தமாகும்
ஐயனின் உடையே
நல்ல குணங்கள் தந்து வணங்கச் செய்யும்
பதினெட்டாம் படியாம்!
ஐயன் உடையணிந்த பக்தருக்கு உற்ற துணை தானிருப்பார்!
உலகமெல்லாம் தான் வணங்கும்
உத்தமனாம் நம் ஐயப்பனை!!
உங்கள் கருத்து : comment