நல்லவர்கள் கூடும் மலை நன்மைகள் வழங்கும் மலை ஐயப்பன் பாடல் வரிகள். Nallavargal Koodum Malai nanmaigal vazhangum Malai - K. Veeramani Ayyappa song Tamil Lyrics
நல்லவர்கள் கூடும் மலை
நன்மைகள் வழங்கும் மலை
அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை
இருமுடிகள் சேரும் மலை
இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை)
பதினெட்டுப் படிகள் மின்னும்
பந்தளத்து மன்னன் மலை
மாலை இட்டார் திரளும் மலை
ஓங்கினுப்பார் வணங்கும் மலை
காலமெல்லாம் உலகனைத்தும்
காக்கும் எங்கள் ஐயன்மலை
தவமிருக்கும் தெய்வமலை
தன் அருளை பொழியும் மலை
மகரச்சுடர் ஒளிவடிவில்
மணிகண்டன் தோன்றும் மலை
உங்கள் கருத்து : comment