வெளியிட்ட தேதி : 22.05.2021
யமஹா FZ-X 150
Automobiles

Upcoming Yamaha FZ X India Launch

யமஹா FZ X செப்டம்பர் 2021 இல் இந்தியாவில் ரூபாய். 1,10,000 முதல் 1,30,000 வரை விலை வரம்பில் அறிமுகமாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது Yamaha FZ X ஐ ஒத்த பைக்குகள் ஆக‌ பஜாஜ் பல்சர் 150, பஜாஜ் பல்சர் 180 & சுசுகி கிக்ஸ்சர் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் ஏஇ -47 ஆகும், இது நவம்பர் 2021 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான‌ யமஹா (Yamaha) அதன் புதிய சக்திவாய்ந்த யமஹா FZ X பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில், டிவி கமர்ஷியல் படப்பிடிப்பின் போது இந்த புதிய பைக் காணப்பட்டது. 150CC பிரிவில், இந்த பைக் சந்தையில் தனது சக்தியைக் காட்ட முழுமையாக தயாராக உள்ளது.

யமஹாவின் (Yamaha) FZ X வெர்ஷன் 3.0 பைக்கில் ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.2 பிஹச் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். FZ V3 மாடலை விட வித்தியாசப்படும் வகையில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ள இந்த மாடலின் பெட்ரோல் டேங் அமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதலான எக்ஸ்டென்ஷன் கொடுக்கப்பட்டு வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியும், சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் இன்ஜின் கட் ஆஃப் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X ஆப் நிறுவ‌ வேண்டும்.

யமஹா FZ-X 150 பைக்கின் விலை ரூ.1.11 லட்சம் (ex-showroom) விலைக்குகள் ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.