வெளியிட்ட தேதி : 27.07.2021
Ola Electric Scooter Registers 1 Lakh Bookings
Automobiles

Ola Electric Scooter Registers 1 Lakh Bookings In 1 Day - New Record

போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனங்களின் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும் வாகனங்களின் எண்ண‌ அதிகரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு கவனிக்கத்தக்க ஒன்று. மறுபுறம் ஏறிக்கோண்டே போகும் பெட்ரோல் விலை. இவ்வகை காரணங்களினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். அனைவருக்கும் மகிழ்ச்சிதரும் சேதியாக‌ ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இதன் முழுவிவரங்களை பார்க்கலாம்.

பல்வேறு வாகன‌ உற்பத்தியாளர் ஈவி புரட்சியில் ஈடுபடுத்தி உலகினை நிலையான‌ இயக்கத்திற்கு மாற்றுவதற்கான பணியில் இற‌ங்கியுள்ளனர். இந்நிலையில் ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து இவி புரட்சியில் இணைந்த அனைத்து நுகர்வோருக்கும் நன்றி என என பவிஷ் அகர்வால் டுவிட்டரில் குறிப்பிட்டார். மேலும் இது ஆரம்பம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்./p>

ஓலா எலக்ட்ரிக் தனது இணையதளத்தில் ஜூலை 15 முதல் ஸ்கூட்டர் முன்பதிவு செய்ய‌ அனுமதித்து வருகிறது. இதில் ரூ.499 டோக்கன் தொகையினை செலுத்தி முன்பதிவு செய்யலாம் என‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாத இறுதியில் நாட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்பதிவு துவங்கப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான‌ முன்பதிவுகளை பெற்றுள்ளது. அதேபோல் வரவிருக்கும் காலங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பயங்கர போட்டிகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.