வெளியிட்ட தேதி : 30.10.2021

Maruti Suzuki India will launch electric vehicles in the country only after 2025

மாருதி சுஸுகி நிறுவனம் மின்சார‌ கார்களை தயாரிக்கும் முன்னேற்பாட்டில் ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை (Diesel engine Cars) தயாரிப்பதை நிறுத்திவிட்டது. விரைவில் CNG தயாரிப்புகளை கொண்டு வருவதோடு, எதிர்காலத்திற்கான நெகிழ்வான எரிபொருள் வாகனங்களை (Flexible-fuel Vehicle) உருவாக்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் அதிகமாக‌ விற்பனையாகும் வாகனங்களை செய்யும் நிறுவனம் மாருதி என்பதால், மின்சார வாகனச் சந்தையிலும் மக்கள் மாருதியின் வாகனங்களையும் எதிர்பார்க்கின்றனர். இந்த‌ கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் நிறுவனத்தின் கூற்றுப்படி, மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், தற்போது, ​​மிகப்பெரிய மின்சார கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata motors) என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாருதி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் ஆனது 2025ஆம் வருடத்தில் அல்லது அதற்கும் முன்னரே அறிமுகம் ஆகக்கூடும் என‌ எதிபார்க்கப்படுகிற‌து. அறிமுகத்துக்கான சரியான தேதியை மாருதி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இதனை தாய் நிறுவனமான சுசுகி முடிவு செய்யும் என்று உறுதி செய்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.