வெளியிட்ட தேதி : 29.10.2021

Forget flying cars, watch the world's first flying bike that can also hover

காற்றில் மிதக்கும் உலகின் முதல் பறக்கும் XTURISMO பறக்கும் பைக், அல்லது ஹோவர்பைக், ALI டெக்னாலஜிஸ் என்ற ஜப்பானை தளமாகக் கொண்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் சுமார் அரை மணி நேரம் வட்டமிடலாம்.

XTURISMO பறக்கும் பைக்கின் எடை சுமார் 300 கிலோ ஆகும். பறக்கும் பைக் 3.7 மீட்டர் நீளம், 2.4 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் உயரம் கொண்டது. இப்போதைக்கு ஒரு பைலட் மட்டுமே அமர முடியும்.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாத இறுதியில் நாட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்பதிவு துவங்கப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான‌ முன்பதிவுகளை பெற்றுள்ளது. அதேபோல் வரவிருக்கும் காலங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பயங்கர போட்டிகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.A.L.I. Technologies நிறுவனம் X Turismo லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை ஹோவர்பைக் தொடர்பான பிரமிப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஹோவர்பைக்கில் வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பறக்கும் பைக் புஜியில் உள்ள பந்தய களத்தில் இயக்கி காண்பிக்கப்பட்டது. இந்த மொடல் மொத்தத்தில் 200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இந்த பைக் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்க முடியும். இந்த லிமிடெட் எடிஷன் பறக்கும் பைக்குகளின் முதல் யூனிட்களின் டெலிவரி அடுத்த ஆண்டு முதல் பாதியில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.