வெளியிட்ட தேதி : 30.10.2021

Strom R3, India's Most Affordable Electric Car To Go On Sale

மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் (Strom Motors) 3 சக்கரங்களைக் கொண்டுள்ள புது இரகமான‌ மின்சார காரை தயாரித்துள்ளது. அன்றாடம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையினால் மக்கள் மின்சார கார்களை எதிர் நோக்கியுள்ளனர். எனவே நீங்கள் மின்சார‌ வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இச்செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் தயாரிப்பான‌ அட்டகாசமான, மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த மின்சாரக் காரின் அம்சங்களும் அசத்தலாக உள்ளன. ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது இரக எலக்ட்ரிக் காருக்கு ஸ்ட்ரோம் ஆர்3 (Strom R3) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க முன்பதிவும் செய்துகொள்ளலாம். முன்பதிவு கட்டண‌மாக, ரூ. 10,000 ரூபாய் செலுத்தினால் போதும். ஸ்ட்ரோம், இந்த மின்சார காரை மும்பை மற்றும் டெல்லி-என்சிஆர் சாலைகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் வருகின்ற‌ 2022-ம் ஆண்டுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஸ்ட்ரோம் R3 இரண்டு கேப்டன் இருக்கைகள் கொண்டும், அல்லது 3 இருக்கை கொண்ட‌ ஒற்றை பெஞ்ச் இருக்கை கொண்டிருக்கும். 20bhp மற்றும் 90Nm டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டார் இக்காருக்கு சக்தியளிக்கிறது. ஸ்ட்ரோம் R3 இல் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100% சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

தனித்துவமிக்க‌ தோற்றம் கொண்ட‌ ஸ்ட்ரோம் ஆர்3, முன்பக்கத்தில் இரண்டு சக்கரமும், பின்பக்கத்தில் ஒரு சக்கரம் என‌ இயல்பான‌ முச்சக்கர‌ போலின்றி எதிற்மறையாக‌ இருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, ஸ்ட்ரோம் R3 காரில் 4G இணைக்கப்பட்ட கண்டறியும் இஞ்சினும் (4G Connected Diagnostic Engine), டிராக் லொகேஷன் மற்றும் சார்ஜ் லெவல், சன்ரூஃப்பும் உள்ளது.

ஸ்ட்ரோம் ஆர்3 காரின் (Strom - R3 Car) விலை ரூ.4.5 லட்சம் ஆகும். மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்ற‌ இந்த காரை வாங்கினால், முதல் மூன்று ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரையிலான உத்தரவாதம் கிடைக்கும்.

நீங்கள் Strom R3 ஐ வாங்க விரும்பினால், Strom Motors இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.strommotors.com/ -க்கு சென்று முன்பதிவு செய்யலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.