வெளியிட்ட தேதி : 02.03.2021
Volvo pledges to go all-electric by 2030
Automobiles

Volvo pledges to go ‘all-electric by 2030,’ following other manufacturers

வால்வோ (Volvo) மற்ற வாகன‌ உற்பத்தியாளர்களைப் போல‌ ‘2030 க்குள் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரிக் மயமாக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை (electric vehicles) மட்டுமே தயாரிக்கும் குறிக்கோளுடன் ஈடுபடும் நிறுவனங்களுள் வோல்வோவும் சமீபத்தில் இணைந்ததுள்ளது.

2030 க்குள் ஈ.வி.க்களை ((EVs) பிரத்தியேகமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்வீடிஷ் வாகன உற்பத்தி நிறுவனமான‌ (Swedish automaker) வால்வோ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஹபிரிட் (hybrid vehicles) இரக‌ வாகனங்கள் உள்ளிட்ட‌ அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும் அதன் வாகன‌ மாதிரி வரிசையில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்படும் எனத் தெரிய‌ வருகிறது.

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் காரணமாக, வாகன‌ தயாரிப்புகள் அனைத்துமே மின்சார வாகனங்களுக்கான நகர்வு தூண்டப்பட்டதாக ஹென்றிக் கிரீன் கூறினார்.

"உள் எரிப்பு இயந்திரம் கொண்ட (internal combustion engine) கார்களுக்கு நீண்ட கால எதிர்காலம் இல்லை" என்று வோல்வோவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹென்றிக் கிரீன் கூறினார். "மின்சாரக் கார்களை மட்டுமே (all-electric vehicles) தயார் செய்யும் நிறுவனமாக‌ மாறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மாற்றம் 2030 க்குள் நடக்கக்கூடும்", என்றார்.

சீனாவின் ஜீலி குழுமத்திற்கு (China’s Geely group) சொந்தமான இந்த நிறுவனம், அதன் புதிய ஈ.வி.க்கள் (EVs) அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. உலகளாவிய CO2 உமிழ்வு இலக்கு (global CO2 emissions), புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான வாகனங்களின் தடைகளையும் பூர்த்தி செய்ய கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த மாற்றம் தேவைப்படுகின்றது.

ஃபோர்டு மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தின் எரிவாயு மற்றும் டீசல் வாகனங்களை வெளியேற்றுவதற்கான‌ உறுதிப்பாட்டைக் கொடுத்த சில வாரங்களிலேயே வோல்வோவும் இந்த‌ அறிவிப்பினை விடுத்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.