வெளியிட்ட தேதி : 10.02.2021
Apple Autonomous-Car Road Tests Have More Than Doubled in 2020
Automobiles

Apple Autonomous-Car Road Tests Have More Than Doubled in 2020

ஆப்பிள் இன்க். (Apple Inc) நிறுவனத்தின் தன்னியக்க தொழில்நுட்பம் மேம்பட்டதால் 2020 ஆம் ஆண்டில் அதன் சுய-ஓட்டுநர் கார்களின் (self-driving cars) சாலை சோதனையை இரட்டிப்பாக்கியது, இருப்பினும் நுகர்வோர் வாகனத்தை அறிமுகப்படுத்தும் வகையில் போட்டியாளர்களை விட பின்தங்கியிருக்கிறது என‌ வலைதள‌ அறிக்கைகள் கூறுகின்றன‌.

நிறுவனத்தின் கார்கள் கடந்த ஆண்டு 18,805 மைல்கள் ஓடியது, இது 2019 ல் 7,544 மைல்களாக இருந்தது என்று கலிபோர்னியா மோட்டார் வாகனத் துறையில் (California Department of Motor Vehicles) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா இன்க்., ஜெனரல் மோட்டார்ஸ் கோ மற்றும் பிற நிறுவனங்களுடன் போட்டியிட, ஆப்பிள் தானியங்கி மின்சார காரின் வேலைகளை சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்களை சுய-ஓட்டுநர் அமைப்பிற்கென‌ பணிபுரிய‌ செய்கிறது மற்றும் உண்மையான நுகர்வோர் வாகனமே அதன் நோக்கம் என்பதில் கவனம் செலுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் தானியங்கி கார்களை வடிவமைக்கும் பணியினை ஆரம்பித்திருந்தது. எனினும் பின்னர் இப் பணியினை கைவிட்டிருந்தது. கடந்த வருட இறுதியில் மீண்டும் தானியங்கி கார்களை வடிவமைக்கப்போவதாகவும், 2024 ஆம் ஆண்டில் குறித்த கார்கள் வெளிவரும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இக் கார்கள் முற்று முழுதாக தானியங்கி முறையிலேயே இயங்கும் எனவும், டிரைவர்களின் அவசியம் அறவே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தானியங்கி வாகனத் தயாரிப்புக்கு ஆப்பிள் நிறுவனம் Project Titan என பெயர் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.