கருணையின் உருவமே கலைகளின் வடிவமே பி. சுசீலா பாடிய நவராத்திரி சிறப்பு ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா தொகுப்பின் - அம்மன் பாடல் வரிகள். Karunayin Uruvame kalaikalin vadivame - Navarathri Special Amman / Devi Song by P. Suseela from Album Raksha Raksha Jagan Matha - Tamil Lyrics
கருணையின் உருவமே
கலைகளின் வடிவமே
சரணம் உன் பாதம் தாயே
காளியே நீலியே பார்வதி தேவியே
கண்மலர் காட்டிடுவாயே. (க).
சரவணன் அன்னையே
சங்கரன் துணைவியே
சாந்தி தரும் காமாட்சியே
சௌந்தரிய வல்லியே
சாமுண்டி ஈஸ்வரியே
தமிழ் மதுரை மீனாட்சியே
எழுமையாகும் ஆணவம்
திருவடியில் விழுந்தேன்
இருள் எல்லாம் பறந்தோடுதே
என்றென்றும் நெஞ்சினிலே
நின்றாடும் மயிலாக
இருக்கின்ற திரிசூலியே
ஒருமுறை அம்மா என்று
உரைத்தாலும் போதுமே
ஓடிவந்து அருள்வாயே
கருமாரி பகவதி
சமயபுரம் மகமாயி
கற்பகாம் பிகை சக்தியே. (க).
உங்கள் கருத்து : comment