வெளியிட்ட தேதி : 27.07.2021
Yamaha electric Bikes
Automobiles

Upcoming Yamaha electric Bikes

ஜப்பானைச் சார்ந்த‌ இரு சக்கர வாகன நிறுவனமான யமஹா இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகனத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. எரிபொருள் விலைகள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொடுவதால், இந்திய மக்களின் விருப்பதிற்கென்று, சில சவால்களுக்கு மத்தியிலும், மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தை மெதுவாக வளர ஆரம்பித்துள்ளது. மின்சார இரு சக்கர வாகனங்கள் அதிகமான பிராண்டுகளில் அறிமுகமாகியுள்ளன‌. முக்கியமாக அவை பட்ஜெட் மற்றும் தேவை அடிப்படையில் அணுகக்கூடியவை.

மின்சார வாகனங்கள் குறித்து அரசாங்கம் ஒரு தெளிவான வழிமுறையையும் நிலையான கொள்கையையும் வகுத்த பின்னரே மின்சார வாகன தளத்தில் நிறுவனத்தின் முதலீடுகள் தொடங்கும் என‌ பல‌ கருத்துக்கள் கூறப்படுகின்றன‌. உள்கட்டமைப்பு, சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி உற்பத்தி மற்றும் பிற மாற்றங்களைப் பற்றியும் இனி அரசாங்கம் யோசிக்க வேண்டும்.

இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருகிறோம் என்று யமாஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு (e2W) ஊக்கத்தொகையை அதிகரித்த FAME II திட்டத்துடன் மின்சார வாகனங்களுக்கு (EV கள்) அரசாங்கம் ஊக்கம் கொடுத்துள்ளது.

"எங்கள் ஜப்பான் தலைமையகத்தில் நாங்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பிரத்யேக குழுவைக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருகிறோம்" என்று யமஹா மோட்டார் (Yamaha Motors) இந்தியா குழுமத்தின் தலைவர் மோட்டோபூமி ஷிதாரா பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.

யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Fascino 125 Fi Hybrid ஸ்கூட்டர் (Hybrid Scooter) ஆனது இந்திய சந்தையில் ஈ.வி. தளத்தில் நுழைவதற்கான முதல் படியாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.