கோவையில் ஐயப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு ! வைரலாகும் வீ்டியோ
அபிஷேக வேளையில் அய்யப்பன் சுவாமியின் சிலை கண் திறந்து மூடுவது போல காட்சியைக் கண்டு பலரும் பரவசமடைந்துள்ளனர்.
கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட அற்புத நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை : செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் ஐயப்ப சுவாமிக்கு 40-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி சரண கோஷம் எழுப்பி பக்தியுடன் மழையில் பூழை நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.
பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட பல சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அபிஷேக வேளையில் அய்யப்பன் சுவாமியின் சிலை கண் திறந்து மூடுவது போல காட்சியைக் கண்டு பலரும் பரவசமடைந்துள்ளனர்.
இந்த அற்புத காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில் உள்ளது.
கோவையில் அய்யப்ப சுவாமி கண் திறந்ததாக வைரலாகும் வீடியோ!#kovai #margazhi #margazhiuthiram #karthigai #ayyappa #ayyappan #swamiyesaranamayyappa #Aanmigam #trending #Dailythanthi #dt pic.twitter.com/HXfdxyKM1d
— DailyThanthi (@dinathanthi) December 29, 2021
உண்மை என்ன ?
இந்த வீடியோவை பதிவு செய்தவர் பரவசத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காண்பித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாக இருக்க கூடும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்து : comment