WhatsApp will require a fingerprint or face ID to use its desktop apps
Gadgets

WhatsApp will require a fingerprint or face ID to use its desktop apps

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் இன்னும் கூடுதலான பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை உங்கள் கணினியுடன் இணைக்க விரும்பும்போது இனி கூடுதலான‌ பாதுகாப்பு வழங்கப்படும். இனிமுதல் உங்களின் அனுமதி இல்லாமல், உங்களுக்குத் தெரியாமல் யாரும் உங்கள் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனை திறக்க‌ முடியாது.

பேஸ் ஐடி அன்லாக் மற்றும் பிங்கர்பிரிண்ட் அன்லாக் பாதுகாப்பு

மொபைல் போன் மோடில் கிடைக்கும் பேஸ் ஐடி அன்லாக் மற்றும் பிங்கர்பிரிண்ட் அன்லாக் (fingerprint or face ID) அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது அதன் வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் பயன்படுத்தியுள்ளது. இதுவரையிலும், வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பை இணைக்க, உங்கள் சாதனத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தீர்கள், இனிமுதல் ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் அல்லது பிங்கர்பிரிண்ட் அன்லாகை பயன்படுத்துமாறு கேட்கப்படும்.

உங்கள் அனுமதியின்றி உங்களின் நண்பர்கள் அல்லது சக‌ ஊழியர்கள் போன்றவர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கைக் கணினியில் ஓபன் செய்வதற்கான வாய்ப்பினை இந்த‌ பாதுகாப்பு முறையானது கட்டுப்படுத்தும். இது வாட்ஸ்அப்பின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு வெப் / டெஸ்க்டாப் வெர்ஷனில் உள்நுழையும் போதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு நோட்டிபிகேஷன் பாப் அப் செய்யப்படும்.

ஆகையால், உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இதன் மூலம் கிடைக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. ஸ்மார்ட்போனில், வாட்ஸ்அப் வெப் வலைப்பக்கத்தின் டிசைன் மறுவடிவமைப்புடன் வரும் வாரங்களில் இணக்கமான கைபேசிகளுக்கு கிடைக்குமென்றும் நிறுவனம் கூறியுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.