வாட்ஸ்அப் சுயமாய் அழியும் படங்கள் அம்சத்தினை பரிசோதித்து வருகிறது.
வாட்ஸ்அப் சுயமாய் அழியும் படங்கள் (Self-Destructing Photos) அம்சத்தினை பரிசோதித்து வருகிறது. கடந்த ஆண்டு 'மறைந்துபோகும் செய்திகள்' (disappearing messages) அம்சத்தை அறிமுகப்படுத்திய பின்னர், பேஸ்புக்கிற்குச் சொந்தமான உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப், iOS மற்றும் Android க்கான எதிர்கால புதுப்பிப்பில் 'சுயமாய் அழியும் புகைப்படங்கள்' அம்சத்தினை பரிசோதித்து செயல்படுத்துவதாக இணையதள தகவல்கள் கூறுகின்றன.
புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்துவதை பல பயனர்கள் தவிர்த்திருந்தனர். எனினும் எந்தவிதமான விதிமுறைகளையும் இதுவரை வாட்ஸ்அப் மாற்றவில்லை.
இதன்படி பயனர்களால் பரிமாறப்படும் புகைப்படங்கள் தானாக அழியக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. உலகளவில், அண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய மியூட் வீடியோ அம்சத்தினை (Mute Video feature) வாட்ஸ்அப் நிறுவனம் (WhatsApp) சமீபத்தில் அறிவித்தது. சுயமாய் அழியும் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. சுயமாய் அழியும் புகைப்படங்களுக்கான ஸ்கிரீன்ஷாட் கண்டறிதலை வாட்ஸ்அப் (screenshot detection for self-destructing photos) இதுவரை செயல்படுத்தவில்லை. வாட்ஸ்அப் இன் இந்த வசதியானது இன்ஸ்டாகிராம் டைரக்டினை (Instagram Direct) ஒத்ததாகும்.