சாம்சங் தனது புதிய கேலக்ஸி S10 பிளஸ் கைபேசியில் 1TB அளவிற்கு சேமிப்பு திறனை அதிகரித்துள்ளது. சாம்சங்கின் புதிய 1TB eUFS (embedded Universal Flash Storage) தீர்வைப் பயன்படுத்தும் முதல் கைபேசி கேலக்ஸி S10+ ஆகும், இது கடந்த ஆண்டு 512 ஜிபி eUFS பதிப்பின் உருவ அளவினைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 விற்பனை செய்த போது "1 டெராபைட் தயார் நிலை," எங்கின்ற குறிப்புடன் சாம்சங் விளம்பரப் படுத்தியது. ஆனால் 1TB சேமிப்பு திறன் அடைய கூடுதலாக 512GB மைக்ரோ அட்டை (512Gb external storage) தேவைப்பட்டது.

தற்போது சாம்சங் கேலக்ஸி S10 பிளஸ் 1TB சேமிப்புடன் தயார் நிலையில் வருகிறது. 1TB சேமிப்பு திறன் என்பது நவீன மடிக்கணினிகளின் சேமிப்புக்கு மேலானது.