உலகின் மிகப் பெரிய விமானம் 20 நிமிடம் சோதனையை நிறைவு செய்தது

World’s largest aircraft completed 20 minute test flight

ஏர்லேண்டர் 10 (Airlander 10) எனும் புதிதாய் வடிவமைக்கப்பட்டு, மாதங்களாய் தயார்செய்யப்பட்டு வந்த விமானம் இன்று காற்றில் 20 நிமிடங்கள் மிதந்து சோதனையை பூர்த்தி செய்த்து. புதுவித (Hybrid Airplanes) வடிவம்பெற்ற‌ இதனை விமானம் (Plane) என்றும், ஹெலிகாப்டர் (Helicopter) என்றும் கூறலாம். காரணம் உள்ளது.

சாதாரண‌ விமானம் போலல்லாமல் இந்த‌ ஏர்லேண்டர் 10 (Airlander 10) விமானத்திற்கு ஓடுபாதை (Run way) தேவையில்லை. ஏர்லேண்டர் 10 ஆல் பனி, பனிக்கட்டி, திறந்த நீர்நிலைகள் என‌ எங்கு வேண்டுமானாலும் தரை இறங்க‌லாம்.

ஆட்கள் ஏற்றிய‌ (Manned Condition) நிலையில் 5 நாட்கள் வரை ஏர்லேண்டர் 10ஆல் பறக்க‌ முடியும். ஆளில்லாமல் இரு வாரங்களுக்கு மேல் பறக்க‌ முடியும். 10 டன் எடை வரை சரக்குகள் (10 tons of cargo) ஏற்றிச்செல்ல‌ முடியும். 300 அடி நீண்ட விமானம் உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களை விட சுமார் 50 அடி நீண்டுள்ளது மற்றும் நான்கு எஞ்சின்களை கொண்டுள்ளது.

சோதனை செய்யப்பட்ட‌ ஏர்லேண்டர் 10ந் வடிவம், அழுத்தக் ஹீலியம் ( pressurized helium) கொண்டு பராமரிக்கப்படுகிறது - கார்பன் ஃபைபரலான‌ (carbon fiber hull) மேலோடினை ஊதிப் பெருக்க - சில 38,000 கன மீட்டர் .

உண்மையில் இந்த‌ ஆகாய கப்பல் (airship), அமெரிக்க இராணுவத்திற்காக‌ (the US military) திட்டமிடப்பட்டது. செலவின குறைப்புக்கள் காரணமாக‌ 2013 ல் நிதி இழந்தது. பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து அரசு மானியங்களுடன், இரு திரள்நிதி திரட்டல் விளம்பரப்படுத்தல் (two crowdfunding campaigns) மூலம் $ 4.4 மில்லியனைத் இந்த‌ ஹைபிரிட் விமானங்கள் திரட்டின‌.

நாள் : 18.08.2016 திருத்தம் : 09.12.2016

புதியவை / Recent Articles