இப்போது ஃப்ரீசார்ஜ் பயன்படுத்தி ரயில் டிக்கெட் புக்கிங் செய்யுங்கள்

Freecharge wallet for IRCTC payment
Travel

Freecharge wallet,now, an added option for IRCTC payment for online ticket booking

இப்போது ஃப்ரீசார்ஜ் (FreeCharge) பயன்படுத்தி ஐஆர்சிடிசி (IRCTC) ரயில் டிக்கெட்டை நீங்கள் புக்கிங் செய்துகொள்ளலாம். ஃப்ரீசார்ஜ் வாலட் (FreeCharge wallet) பயனர்கள் இப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள‌ டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்ய முடியும் (digital payments for railway ticket bookings). ஃப்ரீசார்ஜ், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துடனான‌ (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) கூட்டு நடவடிக்கையின் மூலம் பயனர்கள் பயனடைய‌ முடியும்.

ஃப்ரீசார்ஜ் வாலட் (ப‌ணப்பை) பயன்படுத்தி சாதாரண மற்றும் தட்கல் மணி நேர‌ டிக்கட்களை முன்பதிவு செய்துகொள்ள‌ (Freecharge option available on both normal and tatkal hours train ticket bookings) முடியும். இதையடுத்து IRCTC இல் டிக்கட் புக்கிங் செய்யும் போது, மூன்று முக்கிய டிஜிட்டல் வாலெட்டுகள் (Digital Wallets) - Paytm, MobiKwik மற்றும் FreeCharge எனபனவற்றை கட்டண விருப்பமாக தெரிவு செய்ய‌ முடியும்.

இப்போதுவரை IRCTC தனது மேடையில் 180 மில்லியன் பரிமாற்றங்களை செயல்படுத்தி வருகின்றது. ஏப்ரல் 2015 இல், ஒரே நாளில்,13.45 லட்சம் இ-டிக்கெட்டுகள் IRCTC பயனர்களால் புக்கிங் செய்யப்பட்டது. இதுவே IRCTCஆல் பதிவுசெய்யப்பட்ட‌ அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஃப்ரீசார்ஜ், அதன் வாலட் பயன்படுத்தி 10 நொடிகளுக்குள் டிக்கெட்களை முன்பதிவு செய்யமுடியும் (Ticket booking within 10 sec) என‌ கூறியுள்ளது. சமீபத்தில் MobiKwik அதன் வாலட் பயன்படுத்தி 2 விநாடிகளில் புக்கிங் செய்ய முடியும் என‌ அறிவித்திருந்ததது.

ஃப்ரீசார்ஜ் அதன் வாலட் பயன்படுத்தி இரயில்வே கேட்டரிங்கில் உணவு ஆர்டர் செய்வது குறித்து (order food from the railway catering service) ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் பேடிஎம் (Paytm) இதற்கு வழிசெய்கிறது. கடந்த ஆண்டு, Paytm இரயில்வே கேட்டரிங்குடன் கூட்டுசேர்ந்துகொண்டது. தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வழி, இரயில்வே கேட்டரிங் சேவைகளைப் பெறுவதற்காக‌ கட்டணம் செலுத்தவும் அனுமதித்து வருகிறது.

நாள் : 22.11.2016 திருத்தம் : 22.11.2016

புதியவை / Recent Articles