உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்
ஐரோப்பிய இரயில் உற்பத்தியாளரான அல்ஸ்டாம் (Alstom) உலகின் முதல் ஹைட்ரஜன் கலன்களாலான (எரிபொருள் செல்) ரயிலை அறிமுகம் செய்துள்ளது.அண்மையில் உலகின் முதலாவது ஹைட்ரசன் இரயிலை மக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தியது.
ஹைட்ரஜனை எரிவாயுவாக பயன்படுத்தும் இந்த தொரர் வண்டியானது (Hydrogen Fuel Train) டீசல் தொடருந்துகளை விட விலை அதிகமாக இருந்தாலும் எரிபொருள் சிக்கனமானவையாக இருக்கின்றன.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இரயில் தற்போது 62 மைல் வரையிலேயே பயணிகளைக் கொண்டுசென்று சேர்க்கின்றது.
என்றாலும் ஒரு தனி ஹைட்ரசன் கொள்கலன் மூலம் இரயிலின் உச்சக்கட்ட வேகமான 87 மைல்/மணிநேரத்தில் 621 மைல் தூரம் வரையில் பயணிக்க முடியம் என தெரிவிக்கப்படுகிறது.
ஹைட்ரசன் இரயிலில் பயன்படுத்தப்படும் ஹைட்ரசன் கலன்கள் ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும் ஒன்றிணைப்பதன் வழியாக மின்சாரத்தை உருவாக்குகின்றது.
இதன்போது பக்கவிளைவாக நீர் மட்டுமே தோற்றுவிக்கப்படுவதால் மாசுக்களோ பெரிய அளவில் சத்தமோ எழும்புவதில்லை.
எனவே வருங்காலங்களில் ரயில் போன்ற பெரிய வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக ஹைட்ரசனைப் பயன்படுத்துவதனால் கார்பன் மாசுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படுவதை மிகுதியாக குறைக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.