போக்குவரத்து நெரிசல்களுக்கு மேலாகச் செல்லும் உயரமான‌ பஸ்

Automobiles & Technology

This transit Elevated Bus carry passengers in China's horrible traffics

இதுபற்றிய‌ பக்கம் யூடியூப் வீடியோ (காணொளி)

This Elevated Bus can take and bring passengers back in heavy traffic jam

The traffics in China are legendary and the worlds most populated country needs an alternate way of transport. A new concept named Transit Elevated Bus (TEB) have been planned and tests-trial are going on with this elevated bus which can carry 1200 passengers to workplaces and bring them back over traffic jams. The projects is till a concept and a working model of this elevated bus had been presentd in 19th China Beijing International High-Tech Expo and soon expected to be approved and implemented as a new way of future transport.

சீனாவின் போக்குவரத்து நெரிசல்கள் சரித்திரப்புகழ் வாய்ந்தவை. அதுபோன்ற‌தொரு டிராபிஃக் ஜாம் விக்கிபீடியா பக்கம் ஒன்றில் விமர்சிக்கப்பட்டுள்ளது. [China National Highway 110 traffic jam (சீன தேசிய நெடுஞ்சாலை 110 போக்குவரத்து நெரிசல்)] அதை பார்க்கவும் >>

இந்த‌ அற்புத உயரமான‌ பஸ் திட்டம் முன்னுக்குச் சென்றால் சீன நாட்டின் காவிய போக்குவரத்து பிரச்சினைகள் விரைவில் ஒரு கடந்த கால விஷயமாக மாறிவிடும். கீழே இருக்கும் வீடியோ, படங்களை பாருங்கள். புரிந்துவிடும். இடைவழி உயர்த்தப்பட்ட பஸ் (Transit Elevated Bus (TEB) ) எனப்படும் இந்த‌ பேருந்து கைகொடுத்தால் அது எதிர்கால பொது போக்குவரத்துக்கு (public transport) வழிசெய்யும்.

இதுவரையிலும் ஒரு எண்ணக்கருவாகவே இருந்தாலும் ஒரு செயல்புரியும் Transit Elevated Bus (TEB)ன் மினி மாதிரி 19 ஆம் சீன பெய்ஜிங் சர்வதேச உயர் தொழில்நுட்ப கண்காட்சியில் (19th China Beijing International High-Tech Expo) வைக்கப்பட்டது.

இந்த பேருந்தில் 1200 பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல‌ முடியும் மற்றும் பயணிகளை போக்குவரத்து நெரிசலின் மேலாக‌ எடுத்துச்சென்று பணிபுரியும் இடத்திற்கு கொண்டுசெல்லவும், வேலைமுடிந்து வீட்டிற்குச் செல்லவும் இயலும்..

Chinas transit-elevated-bus
Chinas transit-elevated-bus

நெரிசலைக் குறைப்பதற்காகவும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் மாசுபடுதலை குறைக்கும் இந்த‌ திட்டம் ஒரு உயரிய‌ பலந்தரும் யோசனை தான். இந்த இடைவழி உயர்த்தப்பட்ட பஸ் (Transit Elevated Bus (TEB) ) திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் அது நடைமுறையில் வர‌ ஒரு ஆண்டு போதும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.


நாள் : 31.05.2016 திருத்தம் : 31.05.2016

புதியவை / Recent Articles