அமேசான் சரக்கு விமானங்களை சொந்தமாக்குகிறது

Commerce

Amazon is leasing cargo planes to shuttle its own shipments through the air

அமேசான் பொருட்களை வேகமாக‌ விநியோகிக்க‌ சரக்கு விமானங்களை (Cargo Planes) குத்தகைக்கு எடுக்கின்றது. பிரைம் ஏர் ('Prime Air' fleet) என‌ பெயர்பெற்ற‌ அமேசானின் 40 விமானங்கள் அதிவிரைவில் பொருட்களை ஆகாய‌ மார்க்கமாக‌ ஏற்றிச்செல்வதால் அதன் விநியோக‌ நேரத்தினை மேம்படுத்த‌ முடியும்.

அமேசான், அதன் முதல் விமானமானத்தினை (Amazon One), தனது தலைநகர் (Amazon Headquarters) அமைந்துள்ள‌ சியாட்டிலில் (Seattle) நடைபெற்ற‌ சீஃபெயர் ஏர் ஷோவில் (SeaFair Airshow) அறிமுகப்படுத்தியது. போயிங் ரக‌ 767-300 (Boeing 767-300 Planes) விமானம் அதன் வால் பகுதியில் அமேசான் சின்னத்துடன் எண்ணையும் கொண்டுள்ளது.

ஆரம்பகட்டமாக‌ அமேசான் நிறுவனத்தின் பிரத்தியேக சரக்கு ஊர்திகளிகளாக‌ நியமிக்கப்பட்ட 10 மற்ற விமானங்களுடன் சேர்ந்துகொள்ளும். காலப்போக்கில் மேலும் பல‌ விமானங்களை சேர்க்க‌ உள்ளதாக‌ அமேசான் கூறியுள்ளது.

நாள் : 10.08.2016 திருத்தம் : 10.08.2016

புதியவை / Recent Articles