உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட மனித விலா எலும்புகள் பொருத்தப்பட்டது
ஆதாரம் | யூட்யூப் வீடியோ |
உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட மனித விலா எலும்புகள் மருத்துவர்களால் பொருத்தப்பட்டது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 54 வயதானவர் மார்பு சுவர் சதைப்புற்றால் (chest wall sarcoma, cancerous tumor) பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் டைட்டானியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 3டி அச்சிடப்பட்ட மார்பெலும்பு மற்றும் விலா எலும்பின் நகலினை அவரது மார்புக்கு உட்புறமாக பொருத்தினர்.
டைட்டானியம் உலோகத்தால் ஆன நான்கு விலா எலும்பு உள்வைப்பு (implant) வசதியாகவும், மெல்லியதாகவும் நெகிழ்வுத்தன்மையுடையதாகவும் உள்ளதனால் மூச்சு விடுவது எளிதானதாக உள்ளது. இந்த தனிப்பயனாக்க இம்ப்ளேன்ட் ஒரு எலக்ட்ரான் கற்றை உலோக பிரிண்டர் கொண்டு டைட்டானிய உலோகத் தூள்களை அடுக்கு, அடுக்காய் அமைத்து கட்டப்பட்டது.
இந்த நகல்உறுப்பு (implant ) ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த அனாடமிக்ஸ் நிறுவனத்தால் (Melbourne-based medical device company Anatomics) தயாரிக்கப்ப்பட்டது.
இதன் வீடியோவை கீழே காணலாம்.
Below Image : Image Copyright : Anatomics Pty Ltd, Australia
http://www.anatomics.com