ISS க்கு சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்ப இருக்கும் SpaceX மற்றும் HP Enterprise நிறுவனம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station -ISS) ஒரு மாபெரும் கணினி மேம்படுத்தல் நிகழ்பெற உள்ளது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையமானது சற்று மெதுவாக செயல்படும் i386 புராஸசர்கள் (செயலிகளில்) கொண்ட கணினிகளால் கையாளப்படுகிறது. இவை இடைகாலத்தைச் சார்ந்தவை. இது ஒரு பிரச்சினை அல்ல; காரணம் நிலையத்தின் முக்கிய அமைப்புகள் அனைத்தும் தரைப்பகுதி கட்டுப்பாட்டினால் கண்காணிக்கப்பட்டு இருப்பதாலும், எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய எந்தவொரு சிக்கலையும் சரிசெய்ய உண்மையான விண்வெளி வீரர்களுடன் தரைவழி கட்டுப்பாடு இணைந்து பணியாற்ற முடியும்.
ஸ்பேஸ்போர்ன் கம்ப்யூட்டர் எதற்காக ?
உண்மையில் ஸ்பேஸ்போர்ன் ஒரு பரிசோதனை முயற்சியாகும். விண்வெளிச் சூழலில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் (“off-the-shelf” computers) நீண்டகாலத்திற்கு தாக்குபிடித்து வேலைசெய்ய முடியுமா ; என்பதைச் சோதிப்பதாகும் இந்த திட்டத்தின் முக்கியக் கூறாகும்.
பூமியில் இருந்து தொலைவில் செல்லும் போது சிக்கல்கள் எழக்கூடும். சந்திரனுக்கு அப்பால் ஒரு மனித குழுவை அனுப்பி வைக்கும் போது நிலத்தின் கட்டுப்பாடு குழுவுடன் தொடர்பு இல்லாமல் ஒரு ஆழ்ந்த விண்வெளி சூழலில் செயல்படுவதற்கு போதுமான சக்திவாய்ந்த கணினிகள் தேவைப்படுகின்றன.
தொலைதூர பணிகளின் போது தகவல் பரிமாற்றத்திற்கு அரைமணி நேரத்திற்கு மேல் தாமதங்களை ஏற்புடுத்தும். அச்சமயம் எழும் எந்த சிக்கலையும் பணியில் இருக்கும் குழு மற்றும் அதன் கணினிகள் மட்டும் தான் சமாளிக்க முடியும். இதற்காகவே NASA மற்றும் Hewlett-Packard Enterprise (HPE) ஆகியவை இணைந்து,ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை ISS க்கு அறிமுகப்படுத்துகின்றன - இது குளிர், பூஜ்ஜிய கிராம் சூழலில் செயல்படவல்லது. கதிர்வீச்சு, சூரிய எரிப்பு, துணைமண்டல துகள்கள், நுண்ணோட்டோராய்டுகள் மற்றும் பல போன்ற நிலைமைகளை சமாளிக்கும் கடினமான விண்வெளி பயன்பாட்டிற்கென இக்கணினி தயார் செய்யப்பட்டுள்ளது. புதிதாய் உருவாக்கப்பட்ட கணினி ஸ்பேஸ்போர்ன் கம்ப்யூட்டர் என்றழைக்கப்படுகிறது.
திங்கள், ஆகஸ்ட் 14, 12:31 மணிக்கு EST க்கு, ஸ்பேஸ் ஃபால்கன் 9 ராக்கெட் (SpaceX’s Falcon 9 rocket), அமெரிக்காவின் கென்னடி ஸ்பேஸ் சென்டர் (Kennedy Space Center) -- கேப் கானேல்வெல்லிலிருந்து. ஹெச்பி இன் (HPE) ஸ்பேஸ்போர்ன் சூப்பர் கம்ப்யூட்டரை எடுத்துச்செல்லும் .