தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் ரோபோ கண்டுபிடிப்பு

Scientists Develop Robot to Extract Scorpion Venom - Scorpion Milking
Technology

No more Risks in Scorpion Milking : Scientists Develop Robot to Extract Scorpion Venom

விஞ்ஞானிகள் ஸ்கார்பியன்களிடமிருந்து (தேள்) நஞ்சை வேகமாக மற்றும் பாதுகாப்பாக‌ பிரித்தெடுக்கச் (Robot that extracts venom from scorpion) செய்யும் சிறிய‌ ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுப்பதென்பது ஒரு கடின‌ காரியம். மருத்துவக்குணம் கொண்ட‌ தேள் விஷம் உயிர்காக்கும் மருந்துக்களில் கலக்கப்படுகிறது. மருத்துவ‌ ஆராய்ச்சியாளர்கள், விஷம் எடுக்கும்போது தேள் கொட்டுதல் ( deadly scorpion sting), எலக்ட்ரிக் ஷாக் போன்ற‌ இன்னல்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

இந்த‌ ரோபோட் உருவாக்கத்தின் மூலம் பாதுகாப்பாக‌ விஷத்தினை எடுக்க‌ இயலும். ஆராய்ச்சியாளர்கள் வெஸ்-4 (VES-4) எனும் இலகுரக ரோபோக்களை ஆய்வகங்களிலும், பயன்பாட்டு தளங்களிலும் பயன்படுத்திய பாதுகாப்பாக‌ விஷத்தினை எடுக்க‌ வழிசெய்துள்ளனர்.

இந்த‌ ரோபோக்கள் தேளின் வாலினை பிடித்துக் கொண்டு மின்னியல் தூண்டுதல் செய்வதனால் (electrically stimulating scorpion ) தேளிடமிருந்து விஷ்த்துளிகளை ( venom droplets) உதிரச் செய்கின்றது. இவ்வாறு பெறப்படும் நஞ்சுத்துளிகள் பாதுகாப்பாக‌ சேகரிக்கப்பட்டு செமிக்கபடுகின்றது. வெஸ்-4 ரோபோக்கள், தேளினை தூரத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோலால் செயல்படுத்தி விஷத்தினை பாதுகாப்பாக‌ எடுக்க‌ முடியும்.

நாள் : 04.07.2017 திருத்தம் : 14.07.2017