நூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது

New blue-phase liquid crystal display (LCD)
Technology

New liquid crystal display discovered by Central Florida univ. scientists which can triple the sharpness of tv and computer screens

இன்றைய‌ கணினி, தொலைக்காட்சிகளின் டிஸ்பிளேக்கள் (திரைகள்) LCD, LED தொழில்நுட்பம் கொண்ட‌ திரைகளைப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பளிங்கு திரவத்தினை (LCD) விடவும் மேன்மையான‌ மற்றுமொரு சிறந்த மாற்றீடு அளிக்கும் டிஸ்பிளே ஒன்றினை மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த‌ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த‌ விஞ்ஞானிகள் புதியதாய் நீல கலை பளிங்கு திரவத்தினை (blue-phase liquid crystal) உருவாக்கியுள்ளனர். இந்த‌ முன்னோடி பளிங்கு திரவமானது விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள், தொலைக்காட்சிகள் மற்றும் கணினி சாதனங்களின் டிஸ்பிளேக்களை மேம்படுத்தி மூன்று முறை கூர்மையாகவும் தெளிவான படங்களை காட்சியாக்கும் துல்லியம் வாய்ந்த திரைகளை உருவாக்க வழிவகுக்கும். /p>

புதிய லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே அடுத்த தலைமுறைக்கான‌ ஃபீல்டு-சீக்வொன்சியல் கலர் லிக்யூட் கிரிஸ்டல் டிஸ்பிளேவுக்கு ( field-sequential colour liquid crystal displays (LCDs) ), உகந்ததாக உள்ளது.

"புதிய தொழில்நுட்பத்துடன், அங்குலம் ஒன்றுக்கு 1500 பிக்சல் பிரிதிரனைகொண்ட‌ அடர்த்தியினை அதே அளவிலான திரையில், அடைய முடியும்", என்று மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த‌ ஷின் ஷன் வூ (Shin-Tson Wu, from the University of Central Florida) கூறியுள்ளார். த‌ற்போது உள்ள டிஸ்பிளேக்களுள் ஆப்பிளின் Retina திரைகள் மட்டுமே ஒரு அங்குலத்திற்கு 500 பிக்சல்களைக் கொண்ட அதி உயர் வினைத்திறன் வாய்ந்த திரைகளைக் கொண்டது. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பளிங்கு திரவத்தினால் ஒரு அங்குலத்திற்கு 1,500 பிக்சல்கள் கொண்ட திரைகளை உருவாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் நீலகலை எல்சிடி முன்மாதிரி 2008 ல் நிரூபணம் ஆன‌ போதிலும், இந்த‌ தொழில்நுட்பமானது அதிக செயல்படு மின்னழுத்தம் மற்றும் தாமதமான‌ மின் தேக்கி சார்ஜ் செய்யும் நேரம் பிரச்சினைகள் (problems with high operation voltage and slow capacitor charging time) காரண‌மாக‌ உற்பத்தி நிலையினை அடையவில்லை.

இன்று பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு திரைகளை மிகவும் குறைந்த மின்சக்தியை பயன்படுத்தக்கூடியதாக, வீண் விரையமாகும் சக்தியை 40 சதவீதம் குறைக்கும் அளவிற்கு புதுமையானதாய் உருவாக்கப்பட்டுள்ளது.

நாள் : 02.02.2017 திருத்தம் : 02.02.2017