பழைய‌ செல்போன் கழிவிலிருந்து தங்கம் !!

Gold-from-Electrical-waste.jpg
Technology

Edinburgh scientists developed a simple extraction method for extracting Gold from Electrical waste – including old mobile phones, televisions and computers

விலைமதிப்பற்ற உலோகங்கள் மின் சாதனங்களின் உள்ளே காணப்படும் அச்சிடப்பட்ட சுற்று பலகைகளின் (Printed circuit boards) முக்கிய அங்கமாகும்.மொபைல் போன் கழிவுகளில் (Mobile Phone Waste) தங்கம் மற்றும் தாமிரம் (Gold and Copper) போன்ற‌ விலைமதிப்பற்ற உலோகங்கள் காண‌ப்படும்.

பழைய மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணினிகள் ஆகிய‌ மின் கழிவு பொருட்களில், உலகின் ஒட்டுமொத்த‌ தங்க அளவில் ஏழு சதவீதம் காணப்படும் என்று கருதப்படுகிறது. டன் கணக்கிலான தங்கம், மொபைல் போன், டிவி உள்ளிட்ட எலெட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை குப்பைகளாக வீசப்படும் போது இவற்றில் உள்ள தங்கங்கள் பிரித்தெடுக்கப்படாமல் வீணடிக்கப்படுகின்றன‌.

கைவிடப்படுகின்ற‌ மின்னணு சாதனங்களில் இருந்து மீட்டெடுக்கப்படும் தங்கமானது, சுரங்க சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவற்றை குறைக்க முடியும்.இவ்வாறு குப்பைகளில் வீசப்படும் பழைய எலெக்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் ஒரு எளிய இரசாயன முறையை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் நடைமுறையில் இவ்வாறு பிரித்தெடுப்பது மிகவும் சிக்கலாக இருப்பதால் தங்கம் பிரித்தெடுப்பது சாத்தியமில்லாமல் போனதாக‌ கூறி வரப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக (University of Edinburgh) விஞ்ஞானிகள் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை எளிதாகப் பிரித்தெடுக்கும் ஒரு முறையினை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதன் வ‌ழியாக‌ பிரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் தங்கம் மூலம் உலகின் தங்க தேவையைச் சமாளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாள் : 06.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles