MOZI 2 - China-made solar-powered unmanned aircraft
Technology

MOZI 2 - China-made solar-powered unmanned aircraft makes maiden flight

சீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered unmanned aircraft) "மோஸி 2 (MOZI 2)" வெற்றிகரமாக‌ தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆக்ஸாய் ஏர்கிராப்ட் கோ, லிமிடெட் (OXAI Aircraft Co., Ltd) தெரிவித்துள்ளது.

மோஸி 2 (MOZI 2) சோதனை ஓட்டம்

இதன் சோதனை ஓட்டமானது, கிழக்கு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் பகுதியில் அமைந்துள்ள மோகன்ஷான் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீற்றர் உயரம் வரை செல்லக்கூடியது.15 மீட்டர் அளவுடைய‌ இறக்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சூரிய மின்கலங்களால் (Solar Cells) மட்டுமே இயக்கப்படுகிறது.பகலில் சூரிய ஒளியில் 8 மணிநேரம் மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் இந்த விமானம், இரவு மிதமான வேகத்தில் 12 மணி நேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானம் பேரழிவு நிவாரணம், உளவு மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஜி சேவை வழங்குநர்களுடன் இணைந்து விமானத்தின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.