Technology

Shanghai’s Hongkou district is reportedly the first district in the world to have functional 5G network capabilities.

சீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity) இணைப்புடன், பிராட்பேண்ட் ஜிகாபைட் நெட்வொர்க் (broadband gigabit network) பெற்றுள்ள உலகின் முதல் மாவட்டம் எனும் ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் அமெரிக்க இடையேயான 5ஜி பந்தயத்தில் - சீனா பட்டியலில் மேல் இடத்தை பெறுவதாகத் தெரிகிறது. ஜிஎஸ்எம் சங்கத்தின் படி, சீனா 2025 இல் உலக 5G இணைப்புகளில் 40% பிரதிநிதித்துவத்தை பெறும் என தெரிய வருகிறது.

உலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் மாவட்டம்

ஷாங்காயின் ஹாங்கவ் மாவட்டம் 5 ஜி நெட்வொர்க் திறன் பெற்று செயல்படுத்திய உலகின் முதல் மாவட்டம் - அறிக்கை.

சீன அரசாங்கம் 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த பகுதியில் 10,000 5G அடிப்படை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதுவரையிலும் 5 ஜி நெட்வொர்க்குக்கான சோதனைகள் தான் நடைபெறுகிறது, நெட்வொர்க் முழுமையாக இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆனால், அதிகாரப்பூர்வமாக, இயக்கப்படும் போது, சந்தாதாரர்கள் தங்கள் சிம் கார்டுகளை மேம்படுத்தாமல் அவற்றைப் பயன்படுத்தி கொள்ள முடியும். இருப்பினும், அவர்கள் கைபேசிகள் 5G திறன் கொண்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 5ஜி ஆதரிக்கும் கைபேசி இப்போது மிக மலிவானது அல்ல.

5ஜி நெட்வொர்க் சோதனை, ஷாங்காயின் ஹாங்கௌவில் நடைபெற்றுவரும் நிலையில், சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் (vice mayor of Shanghai, Wu Qing), 5ஜி சேவையில், ஹூவாய் மேட் எக்ஸ் (Huawei Mate X) ஸ்மார்ட்போன் உதவியுடன் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். சீனாவின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை பெறுவதற்கு பல்வேறு நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், ஹூவாய் நிறுவனம் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.