விண்வெளி செல்லும் சாதாரண பொதுமக்கள்!. சொந்த செலவில் அழைத்து செல்லும் அமெரிக்க தொழிலதிபர்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (SpaceX) விண்வெளிக்கு செல்லும் உலகின் முதல் all-civilian மிஷனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதாரண பொது மக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் (SpaceX Dragon) விண்கலத்தில் பயணிக்கவுள்ளனர்.
இந்த விண்கலம் 7 பேரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த விண்கலத்தின் மூன்று சீட்களை ( three seats ) இடங்களையும் அமெரிக்க தொழிலதிபரும், பைலட்டுமான ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) எனும் கோடீஸ்வரர் நன்கொடையாக வழங்க உள்ளார். அவர்தான் 3 சாதாரண பொதுமக்களை இந்த பயணத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்கிறார்.
அவர்களில் ஒருவராக அமெரிக்காவின் செயின்ட் ஜூட் குழந்தைகள் நல மருத்துமனையில் பணியாற்றும் நபருக்கு ஒரு இருக்கை செல்லும், மற்றோரு இருக்கை அதே மருத்துவமனைக்கு அதிக நன்கொடை அளித்த நபர்களில் ஒருவருக்கு வழன்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு செய்யப்படவுள்ள 3 பேரின் முழு விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணத்திற்கு முன்பு அவர்கள் அனைவருக்கு முறையான பயிற்சி வழக்கப்படவுள்ளது.