NASA's new InSight lander
Technology

NASA launches InSight spacecraft to understand the internal structure of Mars.

செவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு செய்யும் நோக்குடன் 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது நாசா (NASA launched its InSight spacecraft on Saturday morning from the Vandenberg Air Force Base in California).
'இன்சைட்' விண்கலம் (NASA's InSight spacecraft ) வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தினில் ரோபோ கை, கண்காணிப்பு கேமரா, சோலார் பேனல்கள், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தை கணக்கிடும் சென்சார்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன‌. இதில் 'சீஸ்மோமீட்டர்' என்ற நிலநடுக்கமானி கருவி, செவ்வாயின் நிலம் மற்றும் பாறைதட்டுகளின் இயக்கத்தை ஆராய பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப பட்ட‌ விண்கலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், அட்லஸ் ராக்கெட் மூலம் 'இன்சைட்' விண்கலத்தை (சனி: மே 5.2018) அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியின் இயக்கம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வதே இந்த விண்கலத்தின் நோக்கம்.

இந்த‌ 'இன்சைட்' விண்கலத்தினை (InSight spacecraft)
டென்வரில் உள்ள 'லாக்ஹீட் மார்டின் விண்வெளி அமைப்பு' 2010ல் தயாரித்தது. 2016ல் ஏவுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில‌ காலங்கள் தயார் செய்வதற்கென‌ தள்ளிவைக்கப்பட்டது. நாசாவின் இந்த மிஷன் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கிரகத்தின் உள்பகுதியில் என்ன நிகழ்கிறதெனவும், ஒரே காலகட்டத்தில் உருவான பூமியும் செவ்வாயும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அறியலாம் என‌ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

செவ்வாயின் வெப்பத்தை எடுப்பதற்கு, ஏறக்குறைய 16 அடி அல்லது 5 மீட்டர் அளவுக்கு முன்னரை விட‌ ஆழமாகத் தோண்டி - கிரகத்தின் வெப்பநிலையை எடுக்க உள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் அடுக்குகள் (வெளி அடுக்கு, மத்திய அடுக்கு மற்றும் உள் அடுக்கு / size of the core, the mantle, the crust of Mars Planet) , அவை எவ்வளவு ஆழத்தில் உள்ளன மற்றும் அவை எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.