ISRO-TV-Channel
Technology

Indian Space Research Organisation ‍ISRO, to Soon Start Space And Science TV Channel as ISRO TV

இந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும் அறியும் வண்ணம், விரைவில் இஸ்ரோ நிறுவனம் ( Indian Space Research Organisation (ISRO)) ஒரு பிரத்யேக விண்வெளி மற்றும் அறிவியல் தொலைக்காட்சி சேனலை அறிமுகப்படுத்த உள்ளது.

புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) ஒரு தொலைக்காட்சி சேனலைத் துவங்கவுள்ளதாக
இஸ்ரோ சேர்மன் கே.சிவன் அறிவித்தார்.

இஸ்ரோ டிவியானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தகவல்கள் மற்றும் இஸ்ரோ பற்றிய‌ செய்திகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அறிவுப்பூர்வமான பல தகவல்களை உள்ளடக்கும் விதமாக இந்த டிவி செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த‌ சேனலுக்காக‌ ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல மொழி பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது எனவும் சேர்மன் கே.சிவன் தெரிவித்தார். விண்வெளி பயன்பாடுகள், முன்னேற்றங்கள், விஞ்ஞான விவரங்களைக் காண்பிக்கவும் மக்களுக்குச் செய்திகளை ஒளிபரப்பவும் புதிய இஸ்ரோ சேனல் செயல்படும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் நிகழும் அனைத்து சாட்டிலைட் ஏவுதல் நிகழ்வுகளையும் இந்த சேனல் வாயிலாக‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.