சந்திரனில் ஆய்வு; இஸ்ரேல் முதல் முறையாக விண்கலம் ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட்டில்
சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்பியுள்ளது. ‘பெரிஷீட்’ (Beresheet ) எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது. ‘பெரிஷீட்’ என்பது ஆதியில் எனப்பொருள்படும் (“in the beginning”) - (பைபிளின் முதல் வார்த்தைகள்).
பெரீஷீட் என்றழைக்கப்படும் முதல் இஸ்ரேலிய சந்திர விமானமானது SpaceIL மற்றும் , இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்க்களின் (SpaceIL and Israel Aerospace Industries) கூட்டு முயற்சியால் உருவாக்ககப்பட்டது. பெரிஷீட் (Beresheet) விண்கலமானது நிலவிற்கான உலகின் முதலாவது தனியார் திட்டமாகக் கருதப்படுகின்றது. சுமார் 95 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பால்கன் 9 ராக்கெட் (SpaceX Falcon 9) மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது. இது பூமிக்கு தரவை அனுப்புவதற்காக காமிராக்கள், காந்த உணரிகள் மற்றும் டிரான்ஸ்மிட்டர்களைக் கொண்டுள்ளது.
முன்னதாக ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்பியுள்ளது.