alan-bean-astronaut-dies
Technology

Alan Bean, who became the fourth man to walk on the moon dies at 86

சந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டு விண்வெளி , நாசா அப்பல்லோ மிசன் (NASA’s Apollo missions) குறித்த‌ ஓவியங்களையும் வரையத் துவங்கினார்.

கடற்படையில், சோதனை பைலட் ஆன‌ பீன், 1981 இல் நாசாவை விட்டுச் சென்று, முழுநேர கலைஞராக விரும்பினார், விஞ்ஞானப் புனைகதைகளை யதார்த்தமாக்கும் விதமான‌ உருவங்களை
தனது ஓவியத்தில் உருவாக்கினார். “I think of myself not as an astronaut who paints,” மேலும், “but as an artist who was once an astronaut.” என்றும் அவர் கூறியுள்ளார்.

புவியினை தன் கற்பனையிலும் சிந்தையிலும் கொண்டு ஓவியத்தாலும், நிலவினில் கால்பதித்தும் சாதனை படைத்த‌ ஆலன் பீன், ஹியூஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 26) அன்று இறந்தார். அவருக்கு வயது 86. மரணம் குறித்து அவரது குடும்பத்தார் தெரிவித்ததன்படி நாசாவால் வெளியிடப்பட்ட அறிக்கை.

ஆலன் பீன் அவரது ஓவியங்களை தனது வலைத்தளத்தில் விற்று வந்தார். ஒரு குறிப்பிட்ட‌ ஓவியத்திற்கென‌ $ 175,000 டாலரும் பெற்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட‌ நாசா விண்கலத்தில் (அப்பல்லோ 12) பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், சந்திரனில் 31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார்.

சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆலன் பீன் அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் காலமானார்.