ஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா ??
ஆப்பிள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள iOS-ல் கெட்ட வார்த்தை பேசும் எமோஜி (New Emoji) மற்றும் பல எமோஜிக்களைச் சேர்த்துள்ளது . ஆப்பிளின் சமீபத்திய ஐபோன்களுக்கான iOS மேம்படுத்தலில் புதிதாய் 70 எமோஜிக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அவற்றில் தாடி நபர், தாய்ப்பால் ஊட்டும் பெண், சாண்ட்விச் மற்றும் தேங்காய் போன்ற உணவு பொருட்கள், வைரக்கல் வைத்திருக்கும் தாத்தா, தேவதை, கடல் கன்னி, மலை ஏறுபவர், ஒட்டகச் சிவிங்கி, ரத்தக் காட்டேரி, டைனோசர், கழுத்துத் துண்டு, T- ரெக்ஸ், ஸீப்ரா, ஸோம்பி மற்றும் எல்ஃப் போன்ற புராண உயிரினங்கள்,வெடிக்கும் தலை ஸ்மைலி முகங்கள் ஆகியவை (Apple's iOS Emojis) அடங்கும்.
இத்துடன் உஷ்... வாயை மூடு (பொத்திக்கிட்டு போ) என்றும் கூறும் எமோஜி, கெட்ட வார்த்தை பேசும் எமோஜி ஆகியவையும் புதுமையாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புத்தம் புதிய ஈமோஜிக்களைப் (Apple's new iOS Emojis) ) பார்க்க விரும்பினால், அக்டோபர் 31ல் வெளியான iOS 11.1 புதுப்பிப்புடன் (அப்டேட்) செயல்படுத்திக் கொள்ள முடியும்.