Social Media Networks
சமூகம்

Uganda imposes a social media tax to cut down on gossip

உகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய "சமூக ஊடக வரி (social media tax)" ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது சமூக தளங்கள், மெசேஜிங் பயன்பாடுகள் மற்றும் வாட்ஸ் ஆப் (Whatsapp), ஃபேஸ்புக் (Whatsapp) மற்றும் ட்விட்டர் (Twitter) போன்ற தளங்களை பயன்படுத்தும் எவருக்கும் என‌ விதிக்கப்பட்டுள்ள வரியாகும் (anyone who uses social networking and messaging apps and platforms like Whatsapp, Facebook and Twitter). இதன்படி 200 ஷில்லிங் (5 அமெரிக்க சென்ட்ஸ்) தினசரி கட்டணமாக‌ வசூலிக்கப்படும்.

சமூக ஊடகங்கள் "வதந்திகளை" ஊக்குவிப்பதாக ஜனாதிபதி யொவேரி முசெவெனி (President Yoweri Museveni) தெரிவித்தார். எனவே இதனை தடுக்கும் பொருட்டு ஜூலை 1 ம் திகதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். என்றாலும் அரசாங்கம் மக்களை எவ்வாறு கண்காணிக்கும், வரி வசூலிக்கும் ( collect the tax) என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

சமூக ஊடக பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் நாடு உகாண்டா மாத்திரம் அல்ல‌. சமீபத்தில், பாப்புவா நியூ கினியா ஒரு மாதத்திற்கு பேஸ்புக் தளத்தினை தடைசெய்யும் என்று அறிவித்துள்ளது. இது நிச்சயமாக து ஒரு நாட்டில் சமூக ஊடக பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான விசித்திரமான வழியாகும்.