விசித்திரமான ஃபேஸ்புக் பிழை : உயிருடன் இருக்கும் சில பயனர்கள் இறந்தவர் ஆயினர் - மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட !!
11.11.2016 அன்று, ஃபேஸ்புக் கணக்கு கொண்ட உயிருடன் இருக்கும் சில பயனர்கள் இறந்தவர் ஆயினர். பின் அப்டேட் செய்து பிழையை உடனடியாக நீக்கிவிட்டது ஃபேஸ்புக்.
செய்தியில், இறந்த நபரின் பெயரில் ஒரு நினைவு கணக்கை அமைக்க பேஸ்புக் படிவத்திற்கான இணைப்பொன்றும் காணப்பட்டது. கீழ் காணும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) புரொஃபைல் பக்கத்தின் சுட்டு திரையைப் (screenshot) பார்த்தால் புரியும்.
ஒரு விசித்திரமான பேஸ்புக் பிழையானது ( Facebook bug ), ஃபேஸ்புக் பயனரின் புரொஃபைல் (Facebook Profile : சுயவிவரங்கள்) பக்கத்தின் மேலே அவர் இறந்துவிட்டார் என நினைவுக்கூரும் வகையில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இறந்துவிட்டார் என தெரிவிக்க ஒரு நினைவு செய்தியைக் (memorial message) காட்டியது என பிசினஸ் இன்சைடரின் செய்தி கூறுகிறது.
இதில் காமடி என்னவென்றால் மார்க் ஜுக்கர்பெர்க்கும் (Mark Zuckerberg) இறந்துவிட்டார் என அவரது கணக்கின் புரொஃபைல் பக்கத்தில் நினைவு செய்தி கூறுகிறது : இச்செய்தியானது பின்வருமாறு தோன்றியது.
We hope people who love [User] will find comfort in the things other share to remember and celebrate his life.
இந்த பிழையினைக் கண்டறிந்த Business Insider இன் அறிக்கைப்படி : இது அனைவருக்கும் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் எப்படி பரவலாக பிழை தோன்றியது என்பதும் தெளிவாக இல்லை. எனினும் உலகளவில் ஃபேஸ்புக் தளத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்கின்றது.
இதுகுறித்து பேஸ்புக் பிரதிநிதி கூறுகையில் : ஒரு குறுகிய நேரத்தில், தவறுதலாக நினைவஞ்சலி செய்திகள் சுயவிவர பக்கங்களில் கணக்குகள் மாற்றி வெளியிடப்பட்டது. நாங்கள் இந்த பயங்கரமான பிழையினை விரைவாக சரி செய்து விட்டோம் என்றும் இதற்கு வருந்துகிறோம் என்றும் பதிலளித்தார்.