ஃபேஸ்புக் வீடியோக்களை இப்போது டிவியிலும் பார்க்கலாம்

Facebook Videos on tv streaming
Gadgets

Facebook users can see videos on TV via Chromecast, Apple TV

பேஸ்புக் பயனர்கள் (Facebook users), குரோம்கேஸ்ட் (Chromecast), ஆப்பிள் டிவி (Apple TV) வழியாக பேஸ்புக் வீடியோக்களை ( (Facebook Vidoes) டிவியில் பார்க்க முடியும். இந்த அம்சத்தை iOS மற்றும் AirPlay இயலச் செய்யப்பட்ட‌ கருவிகளில் அல்லது இணைய உலாவி (iOS and other AirPlay-enabled devices or web browser) பயன்படுத்தி தொலைக்காட்சி திரையில் வீடியோக்களை பார்க்க‌ முடியும். விரைவில் ஆண்ட்ராய்டு கருவிகளிலும் (Android devices) சேர்க்க திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் படி, இந்த புதிய வசதியை பயன்படுத்த, பயனர்கள் கைபேசி அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து ஒரு பேஸ்புக் வீடியோவை தேர்வு செய்து வலது மேல் மூலையில் காணப்படும் டிவி சின்னத்தினை கிளிக் செய்து வீடியோவினை ஸ்ட்ரீம் செய்ய‌ விரும்பும் டிவி அல்லது கருவியை தேர்ந்தெடுக்க வேண்டும் .

தொலைக்காட்சி திரையில் (TV Screen) வீடியோவை பார்க்கும் போது, பயனர்கள் பேஸ்புக் பக்கத்திற்குச் (Facebook pages) திரும்பச் சென்று, பேஸ்புக் ஊட்டங்களை (Facebook feeds) தங்களது கைபேசியில் பார்த்தும் கொள்ளலாம்.

இது பற்றிய‌ வீடியோவினைப் பாருங்கள்.

புது வீடியோக்களை, மற்ற வீடியோக்கள் அல்லது சேமிக்கப்பட்ட டேப்களை (Saved tab) தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்க‌ முடியும்.

பேஸ்புக் நிறுவனம், நேரடி வீடியோக்கள் ( Facebook Live videos) பொறுத்த வரை, பயனர்கள் நிகழ் நேரத்தில் வினைகள் (reactions) மற்றும் கருத்துரைகளைப் பார்க்க முடியும் (comments in real-time) மற்றும் வீடியோ உரையாடல்களிலும் பங்குகொள்ள‌ முடியும் (conversation on the video) என்று கூறுகிறது.

நாள் : 18.10.2016 திருத்தம் : 18.10.2016