புதிய பேட்டரி : நொடிகளில் சார்ஜ் ஆகி நீண்ட‌ நாள் நீடிக்கும்

The Future batteries : supercapacitor battery
அறிவியல்

The Future batteries : that replaces the usual lithium-ion batteries with these supercapacitor battery

மத்திய புளோரிடா பல்கலைக்கழக (University of Central Florida - UCF) விஞ்ஞானிகள் ஒரு சூப்பர் கப்பாசிட்டர் பேட்டரியின் முன்மாதிரியை ( சிறப்பு மின் தேக்கி பேட்டரி, supercapacitor battery prototype) உருவாக்கியுள்ளனர். இது வழக்கமான லித்தியம் அயன் பாட்டரியை விட 20 மடங்கு நீண்டு நீடிக்கும் மற்றும் சில‌ விநாடிகளில் சார்ஜ் ஆகிவிடும்.

இந்த சூப்பர் கப்பாசிட்டர்கள் பேட்டரிகள் வழக்கத்தில் இருக்கும் பாட்டரிகளுக்குப் பதிலாக பயன்படுத்தப் படுமானால், ஒரு சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு வாரத்திற்குமேல் வரையிலும் சார்ஜ் செய்ய‌ வேண்டிய அவசியம் இருக்காது.

சிறப்பு என்னவென்றால், இந்த‌ பேட்டரி சிதைவடைவதும் இல்லை. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி, சுமார் 18 மாதங்களுக்கு பிறகு, ஒவ்வொரு பேட்டரி ரீசார்ஜிங் சுழற்சியின் போதும் ஒட்டுமொத்த திறனில் சிறிய அளவு குறைகொண்டு மெதுவாகச் சிதைவடையத் தொடங்கும் (slow process of degradation can be seen in lithium-ion battery).

சூப்பர் தேக்க‌ பேட்டரி முன்மாதிரியானது 30,000 முறை ரீசார்ஜ்க்குப் பின்னரும் சிதைபடாமல் புது பேட்டரி போன்று செயல்படுகிறது. சூப்பர் கப்பாசிட்டர்கள், ஒரு நிலையான‌ ஆற்றலை பொருளின் மீது சேமித்துக் கொள்வதினால் வெகு விரைவினில் ரீசார்ஜ் செய்துகொள்கின்றன‌. ஆனால் லித்தியம் அயன் பேட்டரிகள், ஆற்றலை சேமிக்க மற்றும் வெளியேற்றுவதற்கு இரசாயன எதிர்வினையை (chemical reactions) நம்பியுள்ளன.

கிராஃபீன் (Graphene) பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் அதிக எலக்ட்ரான்களை அடக்கிக்கொள்ளவும் மற்றும் பேட்டரியின் ஆயுட்காலத்தினை அதிகரிக்கவும் ஒரு பெரிய மேற்பரப்பினை பேட்டரியில் உருவாக்கியுள்ளனர்.

இந்த‌ சிறப்பு மின் தேக்கி ஆராய்ச்சி வெற்றியடைந்தபின், பல‌ வாரங்களுக்கு மொபைல் கருவிகளை ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. அது போல‌ மின்சார வாகனங்களின் வரம்பையும் அதிகரித்துக்கொள்ளலாம், மற்றும் மாற்று எரிசக்தி மூலப்பொருளாகவும் சிறந்த சேமிப்பு திறனுக்கும் வழிவகுக்கலாம்.

நாள் : 22.11.2016 திருத்தம் : 23.11.2016