இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது : ஸ்டீபன் ஹாக்கிங்
அழிந்து கொண்டே இருக்கும் பூமியில் 1,000 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களால் தாக்குபிடிக்க முடியாது என பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) கூறுகின்றார். பேராசிரியர் ஹாக்கிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியனில் (Oxford University Union) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
உரையின்போது, ‘இயற்கைக்கு எதிரான காலநிலை மாற்றத்தால் நாம் வாழ்ந்துவரும் பூமியானது பலவீனம் அடைந்து ஆட்டம் கண்டுவருகிறது; பூமியில் இயற்கைக்கு எதிரான மாற்றங்களால் உருவெடுக்கும் சுற்றுச்சூழலை தடுத்து நிறுத்தாவிடில் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் மனிதர்களே வாழ முடியாத சூழல் ஏற்படும் என பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளரான (theoretical physicist Professor Stephen Hawking) ஸ்டீபன் ஹாக்கிங், புவியில் உயிர் வாழ்தல் என்பது அணு ஆயுத போர், மரபணு ரீதியாக்கப்பட்ட வைரஸ் (genetically engineered virus), அல்லது பெருகிவரும் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் (threat of artificial intelligence) போன்ற பேரழிவுகளால் திடீரென்று அழிந்துவிடு கூடுமென்கின்ற ஆபத்து நிறைந்ததாக உள்ளது என்கிறார்.
ஒருமணினேர பேச்சின்போது, பேராசிரியர் ஹாக்கிங் 'எம் கோட்பாடு' கொண்டுள்ள வெட்டும்விளிம்பு கணிப்புகளையும் ('M-theory predictions'), ஆதியிலிருந்து படைப்பு இதிகாசமான பிரபஞ்ச தோற்றம் (origin of the universe) குறித்த மனிதன் புரிந்த வரலாற்றையும் உரைத்தார்.
இந்த பேரளிவைத் தடுத்து நிறுத்த தீவிரமான புவியியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் சாத்தியங்களை குறித்த ஆராய்சிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்றும் மனிதர்கள் குடியேற இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் அதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.