அறிவியல்

This illusion will make you doubt your eyes


ஒரு மூலையில் இருக்கும் பொருள் சிறிதாகவும் மற்றொரு மூலையில் இருக்கும் பொருளை பெரிதாகவும் காட்டும் அறையே ஏம்ஸ் அறை (Ames Room) எனப்படும். இது ஒரு ஒளியியல் மாயம் ஆகும். இவ்வறை சிறிய மற்றும் பெரிய பொருட்களையும் ஒரே அளவுடையதாகக் காட்டும் மாயத்தோற்றமுடையது. இதனை அடல்பேர்ட் ஏம்ஸ் (Adelbert Ames, Jr. ) என்பவர் 1934இல் கண்டுபிடித்தார்.

ஒரு சாதாரண சதுர அறை போலத் தென்படும் இந்த‌ அறை உண்மையில் சரிவக உருவமுடையது. இதனால் ஒரு மூலையில் உள்ள நபர் இராட்சத அளவுடையதாகவும் இன்னொரு மூலையில் உள்ளவர் குள்ளமாகவும் தென்படுவார். அந்நபரைத் தவிர அவ்வறையின் காண‌ப்படும் அனைத்து பொருட்களும் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு சாதாரணமாகவே தென்படும்.