Gmail iOS app send and request money
Gadgets

Gmail’s iOS app has new feature which now lets you send and request money Via Google Pay

ஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப்பில் (Gmail’s iOS app) கூஃகிள் பே (Via Google Pay) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். பயனர்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியுடன் பணத்தை அனுப்பலாம். மின்னஞ்சலில் ஒரு இணைப்புடன் பணமானது அனுப்ப மற்றும் பெறப்படும் (payments will be sent and received via an attachment). இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்புவோர், பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய‌ வேண்டும் (Download latest Version of Gmail iOS App).

Gmail’s iOS app lets you send and request money

Gmail இல் பணத்தை அனுப்ப, உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் பயன்பாட்டைத் திறக்கவும், பின்னர் "compose" என்பதைத் தட்டவும். மேல் வலது மூலையில், "attach" என்பதைத் தட்டவும், பின்னர் "send money" என்பதைத் தேர்ந்தெடுத்து வழிமுறைகளைப் பின்பற்றவும். பணத்தைப் பெறுதற்கு "request money" தேர்ந்தெடுத்து, வழிமுறைகளைப் பின்பற்றவும். முதல் முறையாக யாராவது உங்களுக்கு பணம் அனுப்பியிருந்தால், மின்னஞ்சலைத் திறந்து, வங்கிக்கு பரிமாற்ற செய்ய‌ “transfer” to bank என்பதைத் தட்டவும், பின்னர் உங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்கு டெபிட் கார்டு (debit card பற்று அட்டை) ஒன்றைச் சேர்க்கவும்.

நீங்கள் iOS இல் இருந்தால், Google Pay Send ஆப் மூலம் பணம் அனுப்பலாம். ஒரு பரிவர்த்தனையில் $ 9,999 அல்லது ஏழு நாட்களில் $ 10,000 வரை அனுப்பலாம் என்று Google கூறுகிறது. இந்த‌ பண பரிமாற்ற‌ அம்சம் அமெரிக்காவில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. வரும் நாட்களில் பிற நாடுகளிலும் இது செயல்படுத்தப்படும் என‌ Google கூறுகிறது.

எனினும் இச் சேவையினை ஆப்பிளின் iOS சாதனங்களின் ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் இப்போதுதான் பெறமுடிகின்றது. ஆண்ட்ராய்டு ஜிமெயிலில் இச்சேவையானது (send money via Gmail on Android) ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அறிமுகமானதென்பது குறிப்பிடத்தக்கது.