வளைந்துகொடுத்து இசையினை உருவாக்கும் நெகிழ்தன்மையுள்ள புதிய‌ கைபேசி!

WhammyPhone a Flexible Smartphone
Gears

WhammyPhone, a bendable smartphone that makes music when bent

நெகிழ்தன்மையுள்ள கைபேசிகள் (Flexible display smart phones) ஒன்றும் புதிதல்ல‌. ஏனெனில் இவ்வகை கைபேசிகளின் முன்மாதிரி வடிவங்களை (prototype of flexible phones) பல்வேறு தயாரிப்பாளர்களிடமிருந்து பல‌முறை கண்டுள்ளோம். என்றாலும் மிக மெலிதான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் தலைமுறையினை காணும் நாம், கைபேசிகள் புதிதாய் என்ன‌ வடிவம் (smartphones with new designs) பெற்றுள்ளன‌ ?? என‌ அறிந்துகொள்வதில் ஆவலாய் உள்ளோம் !!.

இன்றைய நாட்களில், நெகிழ்தன்மையுள்ள (வளையக்கூடிய / bendable smartphones) ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியின் மத்தியில்
கனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஹியூமன் மீடியா லேப்ஸ் இல் ( Queen’s University’s Human Media Lab) பணியாற்றும் குழு ஒன்று வளையும் கைப்பேசியின் மாதிரி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த‌ புதுவித‌ ஸ்மார்ட்ஃபோன் விளக்கம் குறித்த வீடியோ காட்சியினைக் கீழேக் காணலாம்.

இது டிஸ்பிளேவினை வளைக்க வளைக்க‌ வளைந்து கொடுத்து வயலின் அல்லது ஒரு கிடார் போன்ற ஒரு மெய்நிகர் கருவி (virtual instrument like a violin or a guitar) பயன்படுத்தி ஒலி விளைவுகளை (create sound effects as they bend) உருவாக்குகின்றது.

Whammy Phone என பெயர்பெற்று அழைக்கப்படும் இந்த‌ ஸ்மார்ட் கைப்பேசியானது OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டு, 1920 x 1080 Pixel Resolution உடைய திரையினையும், தொடுதிரையினையும் (Flexible Organic Light Emitting Diode or FOLED touchscreen) கொண்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற மனித கணினி ஊடாட்டம் (Human-Computer Interaction) நிகழ்ச்சியில் இக் கைப்பேசியின் செயற்பாடுகள் தொடர்பான‌ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன‌. மற்ற‌ சிறப்பம்சங்கள், அறிமுக நாள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நாள் : 19.10.2016 திருத்தம் : 20.10.2016
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE

புதியவை / Recent Articles