Vivo 6G logo
கைபேசி

Vivo is working on 6G-enabled smart phones, reveals 6G logo

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில் பிரதானமாவதிற்குள்ளேயே 6 ஜி-இயக்கப்பட்ட (6G Mobile Network) ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் செயல்பட்டுவருவதாக‌ இணையத் தகவல்கள் வாயிலாக‌ தெரிய‌ வருகிறது.

நாம் தெரிந்து பிரயோகம் செய்துவருகின்ற‌, வேகம் கூடிய மொபைல் வலையமைப்பான 4G (4G Mobile Network) தான் தற்போது உலக அளவில் உபயோகத்தில் உள்ளது. 5G (5G Mobile Network) பயன்படுத்தப்பட்டாலும், தற்போது அதனை உபயோகப்படுத்தும் நாடுகள் சிலவே.

6 ஜி இணைப்புடைய‌ கைபேசியஒ எப்போது காணலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஹூவாய் நிறுவனத்தின் கூற்றின்படி, 6 ஜி நுட்பமானது வந்தடைய‌ 2030ஆம் ஆண்டு வரையிலும் காதிருப்பதாகும்.

இந்த‌ 5ஜி வலையமைப்பானது உலகின் சில நாடுகளில் மாத்திரமே உபயோகத்தில் உள்ளது. மேலும் இந்த‌ 5G தொழில்நுட்பத்தில் (5 Gen cellular network technology) செயல்படும் கைபேசிகளைச் சில கைப்பேசி நிறுவனங்கள் மட்டுமே வடிவமைத்துள்ளன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதனை விடவும் வேகம் கூடிய 5G மொபைல் வலைய‌மைப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது என்பதனை அனைவரும் அறிந்ததாகும்.

இப்படியிருக்கையில் சீனாவைச் சேர்ந்த கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான விவோ (Vivo) 6G தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன‌.

6 ஜி தொழில்நுட்பம் குறித்த‌ தகவல்கள் குறைவாக‌ மட்டுமே அறியப்பட்டாலும், விவோ நிறுவனம் 6 ஜி லோகோவிற்காக ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் (EUIPO) காப்புரிமை வேண்டி விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 6G இன் இந்த லோகோ விவோ தயார் செய்யும் முதற்கட்ட‌ ஸ்மார்ட்போன்களில் இருந்து பின்னர் தயாரிக்கப்படும் அனைத்து 6G ஃபோன்களிலும் இடம்பெறும்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.