சாம்சங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவரா? எச்சரிக்கை !!

Galaxy Note 7 phones are bursting
Gadgets

Galaxy Note 7 phones are bursting into flames

சாம்சங் (Samsung), உலகம் முழுவதிலுமான‌ அதன் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை (Samsung Galaxy Note 7) தீ பற்றி எரிவதன் காரண‌மாக‌ குறிப்பிடப்படாத அலவிலான‌ கைபேசிகளை திரும்பப்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த பிரச்சினை சம்மந்தமாக‌ 35க்கும் மேலான‌ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன‌ என‌ சாம்சங் உறுதி ப‌டுத்தியுள்ளது.

மின்னேற்றப்படும் நேரத்தில் (During Charging Time) அல்லது அதற்குப் பின்னரோ கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடித்துச் சிதறியுள்ளதாக‌ (burst) பல‌ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன‌. கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்துச் சிதறியது பேட்டரி பிரச்சனையால் தான் (Problematic Samsung Galaxy Note 7 batteries) என‌ காரணமாக‌ அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் விமானங்களில் சாம்சங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போனின் அழுத்தவோ, மின்னேற்றவோ (Charge / சார்ஜ் செய்துகொள்ளவோ) வேண்டாமென அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக‌ வலியுறுத்தியுள்ளது.


இந்தியாவிலும் விமான‌ பயணிகள் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை எடுத்துச்செல்ல‌ நிபந்தனைகளும் எச்சரிக்கையயும் India’s Directorate General of Civil Aviation (DGCA) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் செக்‍இன் பைகளில் கேலக்ஸி நோட் 7 கருவிகளை எடுத்து செல்லலாம் ஆனால் பயண‌த்தின்போது அணைத்து வைத்துக்கொள்ள‌ (swich off during flight)வேண்டும்.

சாம்சங்சின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த பல‌ தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சுமார் 2.5 மில்லியன் கைப்பேசிகளை சாம்சங் நிறுவனம் திரும்பப்பெற்றதோடு மட்டுமல்லாமல் விற்பனையையும் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது

நாள் : 12.09.2016 திருத்தம் : 20.09.2016
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE