வெளியிட்ட தேதி : 13.02.2021

Realme Narzo 30 Pro

Realme Narzo 30 Pro

ரியல்மின் வரவிருக்கும் நார்சோ ஸ்மார்ட்போன் தொடரில் நார்சோ 30 ப்ரோ கைபேசியானது சீன சான்றிதழ் வலைத்தளமான TENAA இல் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கைபேசி குறித்து கசிந்த தகவல்களை பார்க்கலாம். RMX3161 என்ற மாதிரி எண்ணுடன் சமீபத்தில் ரியல்மி சான்றிதழ் டென்னாவில் வெளியிடப்பட்டது.

162.5 × 74.8 × 8.8 மிமீ அளவுள்ள‌ ரியல்மி நார்சோ 30 ப்ரோ (Realme Narzo 30 Pro) , அண்ட்ராய்டு 11 இல் ரியல்ம் யுஐ 2.0 (Android 11 with realme UI 2.0) உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ (Realme Narzo 30 Pro) விவரக்குறிப்புகள்

நார்சோ தொடரில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாகவும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ (Realme Narzo 30) விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதற்கென்று ரியல்மி நார்சோ 30 ப்ரோ அறிமுகத்திற்கு முன்பாகவே ஸ்மார்ட்போனின் டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே (6.5-inch LCD display of Full HD+ resolution), 5000 எம்ஏஎச் (5000mAh battery), பேட்டரியுடன் 65W ஃபாஸ்ட் சார்ஜ் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறையோடு இயக்கப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ (Realme Narzo 30 Pro) வடிவமைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். செவ்வக பின்புற கேமரா வடிவமைப்பு கொண்டுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் வருகிறது.

ரியல்மி நார்சோ 30 (Realme Narzo 30 Pro) தொடர் கைபேசியானது ரூ.15000 என்ற விலைப்பட்டியலில் இருக்கும் என கூறப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.